பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் விளக்கு 43

குரல் அ: இந்தப் பெரிய பூங்கொடியாகிய காட்

சிக்கு வித்துத் திருக்குறள். வேறு குரல் : (பாடுகிறது)

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்ருேர்க்கு அறன்ஒன்ருே? ஆன்ற ஒழுக்கு.

குரல் அ. அறன் என்பது சமுதாயத்தின் ஒழுக்கம் ; ஒழுக்கு என்பது தனி மனிதனுடைய ஒழுக்கம். இத்தகைய பேராண்மை உடையவனுல் சமுதாயம் ஒழுக்கத்துடன் நிலவுகிறது: அறம் வழுவாத நிலையைப் பெறுகிறது. அவனும் ஒழுக்கம் உடையவனுகிருன்.

குரல் ஆ: திருமாலாகிய குறள் வளர்ந்து உலகை

அளந்தது போலத்தான் இந்தக் குறளும் தன்

பொருளால் எத்தனையோ விரிவைப் பெறுகிறது.

(மாற்றம்.) ★

குரல் அ திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் பெருமையிற் சிலவற்றை உணர்ந்து கொண்டோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய அது எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத் துக்கும் பொதுவானது என்பதை அறிந்தோம்.

குரல் ஆ: சுருங்கிய வடிவில் பெருகிய பொருள் விரிவை உடையது என்பதையும் தெளிந்தோம்.

குரல் இ: கவிச்சுவை நிரம்பியது, கவிதைக்குரிய உத்திகளை யெல்லாம் தன்பால் கொண்டது என்ற உண்மையும் புலனுயிற்று. -