பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

பாரத நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளில் சீரிய இலக்கியங்கள் பல இருக்கின்றன. அந்த அந்த மொழியில் அறிவு உடையவர்கள் அவற்றைப் படித்து இன்புறலாம். மற்ற மொழி பேசுகிறவர்களும் அவற்றின் பெருமையை உணர வேண்டுமாயின் இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, நூல்கள் உள்ள மொழியைத் தாம் பயின்று அவற்றைக் கற்றுத் தெளிந்து இன்புறுவது. மற்றொன்று, தாம் பேசும் மொழியில் அவற்றை மொழிபெயர்க்கச் செய்து படித்து இன்புறுவது. முன்னது மிகச் சிறந்த முறையானாலும் எல்லோரும் அப்படிச் செய்வது இயலாத செயல். ஆனால் மொழிபெயர்ப்பதென்பது அதனினும் எளிது; விரிவான பயனைத் தருவது.

பாரத நாட்டு மொழிகளிலுள்ள இலக்கியங்கள மற்ற இந்திய மொழிக்காரர்களுக்கும் அறிமுகப்படுத்தும்பொருட்டு வானொலிக்காரர்கள் சில நிகழ்ச்சிகளே ஒலிபரப்பி வருகிறார்கள். ஒரு மொழியிலுள்ள இலக்கியம் ஒன்றைச் சுவையான முறையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை யாரேனும் ஓர் அறிஞரை எழுதச் செய்து, அதை மற்ற மொழிகளிலும் பெயர்த்து, பதினான்கு மொழிகளிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒலிபரப்பி வருகிறார்கள்.

இந்தத் தேசீய நிகழ்ச்சியில்(National Programme) திருக்குறளின் அறிமுகம் வரவேண்டும் என்று விரும்பி, அதற்குரிய நிகழ்ச்சி ஒன்றை எழுதித் தரும்படி என்னை வேண்டினர், வானொலி அதிகாரிகள். அதன்படி ஒரு மணி