பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 திருக்குறள் விளக்கு குரல் ஈ: மேல்நாட்டாரும் கீழ்நாட்டாரும் பாராட்டு வது , பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றது என்ற செய்திகளையும் அறிந்தோம். குரல் உ : பெருங் கவிஞர்கள் தம் காவியங்களில் எடுத்து விரித்து அமைத்துக்கொள்ளும் தகுதியை உடையது என்பதும் தெளிவாயிற்று. குரல் அ , அது காலம் கடந்தது. குரல் ஆ: இடம் கடந்தது. குரல் இ: செறிவுடைய ஒளிமணி. குரல் : பொழிலாய் விரியும் வித்து. குரல் உ : பல கவிஞருக்குப் பொருள்தரும் பெட்டகம். குரல் அ : கற்கண்டு. குரல் ஆ: பால். குரல் இ: இல்லை, இல்லை, அமுதம். குரல் அ : பெருவிளக்கு அறமென்னும் அகலில், பொருளென்னும் திரியிட்டு, இன்பமென்னும் நெய் சொரிந்து, சொல்லென்னும் தீயைக் கொளுத்தி, குறள் வெண்பா என்னும் தண்டில் வைத்து ஏற்றிய விளக்கு. - - வேறு குரல் : (பாடுகிறது.) .

அறம்தகளி ; ஆன்ற பொருள்திரி ; இன்பு சிறந்தநெய்: செஞ்சொல் தி தண்டு - குறும்பாவா வள்ளுவளுர் ஏற்றிஞர், வையத்து வாழ்வார்கள் உள் இருள் நீக்கும் விளக்கு.

(மறுமுறை பாடுகிறது.)

1. திருவள்ளுவ மால், 47.