பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


iv


நேரம் வருவதற்குரிய ஒன்றைச் சித்தம் செய்தேன். வேறு மொழிகளிலும் இதனை மொழிபெயர்க்கச் செய்தார்கள். இந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாந் தேதி இரவு ஒன்பது மணிக்கு இதனை ஒலிபரப்பினார்கள்.


நிகழ்ச்சியைக் கேட்ட அன்பர் பலர் அதனைப் பாராட்டினர். அதைப் புத்தக உருவத்தில் அமைத்தால் பயன்படும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் விருப்பத்தின்படியே இப்போது இந்தச் சிறிய புத்தகத்தை வெளியிடுகிறேன்.

நான் முதலில் எழுதியதில் சில சிறிய பகுதிகளை நேரங்கருதி ஒலிபரப்பில் குறைக்க வேண்டியிருந்தது. ஆயினும் புத்தகத்தில் அவையும் இருக்கட்டும் என்று, முதலில் எழுதிய உருவத்தில் இதை வெளியிடலானேன். திருக்குறளைப்பற்றி மேல்நாட்டுப் பேரறிஞர்களும் பிறரும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இடையிடையே வருகின்றன. அவற்றின் மூலத்தை அடிக்குறிப்பில் சேர்த்திருக்கிறேன்.

இதனை எழுத வாய்ப்பளித்த வானொலி நிலையத்தாருக்கு என் நன்றி உரியது.


கி. வா. ஜகந்நாதன்
5–12–61
' காந்தமலை '
கல்யாண நகர்,
சென்னை.28