பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 திருக்குறள் விளக்கு

புண்ணியப் பயனாக இருவருடைய ஆடலையும் கண்டு களித்தோம். அற்புதத்திலும் அற்புதமான ஊர்த் துவ தாண்டவ தரிசனத்தைக் காணும் அரிய வாய்ப்பும் கிடைத்தது. -

நடராசர்: நீங்கள் இந்தக் காட்சியில் எதைக் கண்டு வியப்படைந்தீர்கள்?

தேவர்களில் ஒருவர்: எதையென்று சொல்வது? எல்லாமே அற்புதந்தான் ! - மற்றொருவர்: தேவரீரும் காளி தேவியும் மாறி மாறி நடனம் ஆடியதைச் சொல்வோமா? . . . . . . . ."

வேறு ஒருவர்: தேவரீர் காட்டிய ஆடல்கள் அத்தனை யையும் அப்படி அப்படியே காளிதேவி ஆடிக் காட்டிய தன் அருமைப்பாட்டைச் சொல்வதா?

பின்னும் ஒருவர்: கடைசியில் தேவரீர் திருவடியை மேலே தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடியபோது, அதுபோலச் செய்யமுடியாமல் தான் பெண்ணென உணர்ந்து நாணித் தேவி தலை தாழ்ந்ததும்......

நடராசர் : இவ்வளவுதானா? வேறு ஒன்றையும் காண வில்லையா? - -

எல்லோரும்: எத்தனையோ உண்டு; கண்டதையெல்லாம் சொல்லிக் கரைகாண முடியுமா?

நடராசர்: மிகவும் நுட்பமான ஒரு நிகழ்ச்சி நடந்தது,அதை நீங்கள் கண்டீர்களோ?

- (மெளனம்-கிசுகிசுவென்ற சலசலப்பு.)

- நடராசர்: நீங்கள் அதைக் கவனிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அது இன்னதென்று தெரிந்து