பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் விளக்கு, 3. கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால்......

தேவர்கள்: அறியாமையையுடைய அடியேங்களுக்கு எம்பெருமானே அதை உணர்த்தியருள வேண்டும்.

நடராசர் : நான் சொல்ல வேண்டியதில்லை. மயிலாப் பூரில் திருவள்ளுவன் என்னும் புலவன் இருக்கிருன். அவனை அடைந்து கேளுங்கள். அவன் அந்த நுட்பத்தை விளக்குவான். -

தேவர்கள்: சம்போமகாதேவா (நடக்கும் ஓசை)

- (தறிபோடும் ஒலி.) திருவள்ளுவர்: வாசுகி, இன்று புதிய விருந்தாளிகள்

வரப்போகிருர்கள். மலர்களை எடுத்து வை.

(தேவர்கூட்டம் வரும் ஆரவாரம்.) திருவள்ளுவர்: வாருங்கள், வாருங்கள். உங்களைப் பார்த்தால் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்களைப் போலத் தோன்றவில்லையே! உங்கள் திருமுகத்தின் ஒளியே உலகுக்குப் புறம்பானவர்கள் நீங்கள் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் யார்? எங்கே வந்தீர்கள்? - - இந்திரன்: திருவள்ளுவப் பெருமானே, நடராசப்பெரு மான் திருவாலங்காட்டில் காளிதேவியுடன் கூத்து வாதம் நிகழ்த்தினர். கடைசியில் ஊர்த்துவ தாண் டவம் ஆடியபோது அன்ன அவ்வாறு ஆட இயலா மல் தோல்வியுற்ருள்.