பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

போலத், தாழை அப்போது மகரந்தத்தோடு கூடிய பூக்களைச் சோறுபோலச் சொரியும். வாழை தன் குருத்தினை விரித்து அச் சோற்றினை ஏந்திக் கொண்டிருக்கும். இத்தகைய வளமுடையது சந்திரசூடரின் தென்னாரிய நாடு.

சூழ மேதி இலங்குந் துறையிற்

சொறியும் பாலைப் பருகிய வாளை கூழை வாசப் பலாவினிற் பாயக்

கொழும்ப லாக்கனி வாழையிற் சாய வாழை சாய்ந்தொரு தாழையில் தாக்க வருவி ருந்துக் குபசரிப் பார்போல் தாழை சோறிட வாழை குருத்திடும்

சந்த்ர சூடர்தென் ஆரிய நாடே. 3 (மேதி - எருமை. துறை - ஆற்றின் இறங்குமிடம். வாளை - வாளை மீன். கூழைப்பலா - பலாவிலே ஒரு வகை. தாழைச் சோறு - தாழைப் பூக்களின் மகரந்தம். சந்திரசூடர் - சந்திரனைச் சடையிலே சூடியவர்; குற்றால நாதர்)

(4) அழகிய நல்லாரான இள நங்கையர்களின் இனிய சொற்களைப் பழித்ததென்று. ஆடவர்கள் கரும்புகளை வெட்டி மண்ணிலே புதைத்து மூடுவர். எனினும், அவை மீண்டும் செழிப்புடன் வளர்ந்து மடந்தையரின் தோள் அழகையும் தம் பொலிவினாலே வெற்றி கொள்ளும். ஒளியுடைய முத்துகளை ஈன்று, பின்னர் அவர்களுடைய பற்களையும் வெற்றி கொள்ளும். அதன்பின், அவர்களுடைய காதலர்கள் பிரிந்துபோன காலத்திலே, பெண்மையை முற்றிலும் வெற்றி கொள்ளக் கருதி, மதனவேளுக்குரிய கரும்பு வில்லாகவும் சிறந்து விளங்கும். இப்படிப்பட்ட கரும்பு வளம் உடையதான குற்றால நாதருக்குரிய தென்னாரிய நாடே எங்கள் நாடாகும்.

அந் நலார்மொழி தன்னைப் பழித்ததென்று

ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு துன்னி மீள வளர்ந்து மடந்தையர்

தோளை வென்று சுடர்முத்தம் ஈன்று