பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 91

பின்னும் ஆங்கவர் மூரலை வென்று -

பிரியுங் காலத்திற் பெண்மையை வெல்லக் கன்னல் வேளுக்கு வில்லாக ஓங்கும்

கடவுள் ஆரிய நாடெங்கள் நாடே. - 4 (5) தகுதியான வளமுடைய பூமிக்குள்ளே முதன்மை உடையதாக விளங்கும் வளநாடு, சகல தேவர்களுக்கும் அனபு டையதாக விளங்கும் தெய்வீக நாடு; திசைகள் அனைத்திலும் வளர்ந்து ஓங்கிய நாடு, சிவத்துரோகம் என்ற தீமை அறவே நீங்கிப் போன சிவநாடு; பழைமையான நான்மறைகளும் பாடிப் பரவிய நாடு, மைதீற்றிய கண்களையுடைய குழல்வாய் மொழியினைப் பாகமாக உடையவரின் இளந்தென்றல் உலவும் ஆரிய நாடு; இதுவே எங்கள் நாடாகும்.

தக்க பூமிக்கு முன்புள்ள நாடு

சகல தேவர்க்கும் அன்புள்ள நாடு திக்கெலாம்வளர்ந்தோங்கிய நாடு சிவத்து ரோகமும் நீங்கிய நாடு முக்க ணான்விளையாடிய நாடு

முதிய நான்மறை பாடிய நாடு மைக்க ணாங்குழல் வாய்மொழி பாகர்

வசந்த ஆரிய நாடெங்கள் நாடே 5 (6) அகத்திய முனிவர் ஐந்நூறு வேள்விகளைச் செய்து முடித்ததற்கு இடமாயிருந்த நாடு, அநேக கோடி யுகங்களைக் கண்ட மிகவும் பழைய நாடு; தாமரை மலரிலே தோன்றிய நான்முகன் வந்து பிறக்கின்ற நாடு; திருமகளும் கலைமகளும் போற்றுகின்ற நாடு; செம்மையான தமிழ்ச்சொல் வளமுடைய பெரிய முனிவரான அகத்தியர் வந்து சார்ந்த நாடு; சிவந்த கண்களையுடைய திருமால் சிவனாகிய நாடு; பெண்ணைப் பாகத்திலே யுடைய திரிகூட நாதரின், தென்றல் உலவும் ஆரிய நாடே எங்கள் நாடாகும்.

அஞ்சுநூறு மகம்கொண்ட நாடு

அநேக கோடி யுகங்கண்ட நாடு