பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருக்குற்றாலக் குறவஞ்சி- ു உரையும்

பயனற்றவர் என எவருமே கழித்துப் போடப் படுவதிலர். இங்கே, புலம்பக் காண்பதெல்லாம் கிண்கிணிக் கொத்துகளே யல்லாமல் ஏழையரான மக்கள் அல்லர். இங்கே அனைவரும் தேடிக் கொண்டிருக்கக் காண்பதெல்லாம் நல்ல அறநெறி களும் புகழுமேயல்லாமல் போலிச் செல்வங்கள் அல்ல. இத்தகைய சிறப்புடைய திருக்குற்றாலநாதர் வாழுகின்ற தென் ஆரிய நாடே எங்கள் நாடாகும்.

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம் வாடக் காண்பது மின்னார் மருங்குல்

வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி

திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே. 9

11. நகர்வளம் உரைப்பேன்! திருமால், அயன் ஆகியோரும், வேதங்கள் ஆகியவை யும் கூடத் தினந்தினந் தேடியும் காணுதற்கு அரிதாக நிற்கின்றவன் சிவபெருமான். அவனுக்கு உரியது திரிகூட நகரம். அது இருக்கின்ற திரிகூட நாட்டின் வளமோ உரைக்க உரைக்கத் தெவிட்டாத இனிமையினை உடையதாகும். ஆண் களிறுகளுடன் பெண்பிடிகள் கலந்து கூடித் திரிகின்ற மலைச்சாரலிலே, ஒரு வேடனானவன் தன் கையிலே வில்லினை ஏந்தியவனாக, நரியினைத் துர்த்தியவாறே கயிலைமலையைச் சென்றடைந்து முத்தி பெற்றனன். அத்தகைய சிறப்புடையது இத் திரிகூட மலை. இதன் மகிமையையும் இனி நான் சொல்வேன்; நீ கேட்பாயாக

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். அரிகூட அயன்கூட மறைகூடத்

தினந்தேட அரிதாய் நின்ற திரிகூடப் பதியிருக்கும் திருநாட்டு

வளமுரைக்கத் தெவிட்டாதம்மே