பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

ஆனதுறை அயனுரைத்த தானம் அறியாமல்

அருந்தவத்துக்காய்த்தேடித்திரிந்தலையும் காலம் மோனவா னவர்க்கெங்கள் கானவர்கள் காட்டும்

முதுகங்கை ஆறுசிவ மதுகங்கை ஆறே. 4 (மோனம் - மெளனநிலை. முதுகங்கை - பழைமையினை யுடைய தான தேவகங்கை) -

அந்தச் சிவமதுகங்கையின் மகிமையினை உலக மெல்லாம் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கும். அத்தகைய ஆற்றின் கரையிலே விளங்கும் செண்பகாடவித் துறையின் பண்பினையும் நான் சொல்லுகின்றேன் கேட்பாயாக தவஞ் செய்யும் முனிவர்களுடைய கூட்டமும் அவர்கள் தங்கி யிருக்கின்ற மலைக்குகைகளும், சஞ்சீவி முதலான வியப்பான பலப்பல மூலிகைகளும் உடையதாக, வான் வழியே செல்லும் சித்தர்கள் முதலானோரும் மோன நிலையினைப் பெற்றுள்ள யோச புருஷர்களும், இறைவனின் தரிசனத்தை வேண்டிக் காத்துக் கிடக்கின்ற திருக்கைலாயத்தினைப் போன்றிருக்கும் அந்த அடவி. நவ நிதிகளும் விளைகின்ற சிறப்பினையுடைய அவ்விடத்தினைக் கடந்து சென்றால் நங்கைமார்களின் குரவையொலியினைப் போலே அலையெறிந்து ஒலிமுழங்கிக் கொண்டிருக்கும். 'பொங்கு மாங்கடல்’ என்ற தீர்த்தத் துறையைக் காணலாம்.

சிவமதுகங் கையின் மகிமை புவனமெங்கும் புகழும்

செண்பகா டவித்துறையின் பண்புசொல்லக் கேளாய் தவமுனிவர் கூட்டரவும் அவரிரும் குகையும் சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும் கவனசித்தர் ஆதியரும் மவுனயோ கியரும்

காத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே! நவநிதியும் விளையுமிடம் அவிடம் அது கடந்தால்

நங்கைமார் குரவையொலிப் பொங்குமா கடலே. 8 (செண்பகாடவித் துறை - செண்பகமரக் காடுகள் செறிந்த துறை. கூட்டரவும் - கூட்டத்தாலே எழும் அரவமும் நவநிதி - நவமணிகளாகிய செல்வங்கள்.)