பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 97

அந்தப் பொங்குமாங் கடலானது கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய நதிகள் ஒன்று கலக்கும் திரிவேணி சங்கமத்தினைப் போன்ற புண்ணியச் செழிப்பினையுடைய தாகும். அதனைப் பொருந்தியுள்ள சித்திரா நதியின் துறைகள் பொன்னும் முத்தும் கொழிக்கும் வளமுடையனவாகும். ஆகாய கங்கைநீர் என்று சொல்லும்படியாக வான வில்லிட்டு வீழுகின்ற வடவருவித் தீர்த்தத்திலே கலந்து நீராடினால், கழுவப்பட்ட நீரிலே அழுக்குகள் கரைந்து ஒடுவதைப் போல, நீராடுவோரின் பாவங்கள் அனைத்தும் அவரை விட்டுத் தொலைந்து ஒடிப்போகும். அந்தச் சித்திரா நதியானது சங்க வீதியிலே பரவிச் செல்ல, அங்கே சங்கினங்கள் மேய்ந்து கொண்டிருக்கும். பெரிய மதில்களின் உச்சியிலே எப்புறமும் கொழுமையான கயல் மீன்கள் துள்ளிப் பாய்ந்து கொண் டிருக்கும், பூங்கொத்துகள் இதழ் விரிந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் செண்பகச் சோலையினையுடைய குறும்ப லாவினடியிலே கோவில் கொண்டிருக்கும் பெருமானின், குற்றாலத்தலம் என்னும் திரிகூடத்தலமே, எங்களுடைய நகரமாகும்.

பொங்குகடல் திரிவேணி சங்கமெனச் செழிக்கும்

பொருந்து சித்திரா நதித்துறைகள் பொன்னுமுத்தும்

கொழிக்கும் கங்கையெனும் வடவருவி தங்குமிந்த்ர சாபம்

கலந்தாடிற் கழுநீராய்த் தொலைந்தோடும் பாவம் சங்கவீதியிற்பரந்து சங்கினங்கள் மேயும்

தழைத்தமதிற் சிகரமெங்கும் கொழுத்த கயல்பாயும் கொங்கலர் செண்பகச் சோலைக் குறும்பலா ஈசர்

குற்றாலத் திரிகூடத் தலமெங்கள் தலமே. 12 குற்றாலநாதர் திருநடனம் செய்யும் மன்றமாகிய சித்திரசபையிலே, தேவ முரசமானது எப்போதும் மேனமை யாக ஒலிமுழங்கிக் கொண்டிருக்கும். வளமை பெற்றனவான நான்கு யுகங்களுங்கூட இத்தலத்திலே இருப்பவர்க்கு நான்கு கிழமைகளைப் போலக் கழிந்து போகும். மதயானையானது