பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

நாள் தவறாமல் வந்து நின்று, அந்நாளிலே சிவ பூசை செய்து பேறுபெற்ற தலமும் இதுவேயாகும். அனைவரும் பழித்துப் பேசிய புட்பகந்தன் என்பவன், வழிபாடு செய்து பேறுபெற்ற தலமும் இதுவேயாகும். பன்றியுடன் வேடனும் கூடி வலஞ்செய்து முத்தி பெற்ற தலமும் இதுவே யாகும். அடியவர்கள்பால் பாசத்னையுடையவராக இறையவர் வீற்றிருக்கின்ற குற்றாலத்தலம் இதுவேயாகும். வெற்றிச் சிறப்பினைப் பொருந்திய தேவர்களுங்கூடக் குன்றுகளாகவும், மிருகங்களாகவும் உருமாறி வந்து தவஞ் செய்து கொண் டிருக்கும் பெருஞ் சிறப்பினையுடைய தலமும் இதுவேயாகும்.

மன்றுதனில் தெய்வமுர சென்றுமேல் முழங்கும்

வளமைபெறுஞ் சதுரயுகம் கிழமைபோல் வழங்கும் நின்றுமத கரிபூசை அன்று செய்த தலமே

நிந்தனை செய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே பன்றியொடு வேடன் வலஞ் சென்றதிந்தத் தலமே

பற்றாகப் பரமர்உறை குற்றாலத் தலமே வென்றிபெறுந் தேவர்களும் குன்றமாய் மரமாய்

மிருகமதாய்த் தவசிருக்கும் பெரியதலம் அம்மே 16 (மன்று - சித்ரசபை, சதுரயுகம் - நான்கு யுகங்கள். புட்ப கந்தன் - குசலன் என்பவன்)

13. கிளை விசேடம் கேட்டல் 'வார்த்தைகளை மிகவும் நயமுடனே பேசுவதற்குக் கற்றவளான, மலைநாட்டைச் சேர்ந்த குறவஞ்சியே! பூங்கொடி போன்றவளே! தீர்த்தங்களின் பெருமையையும் தலத் தினுடைய சிறந்த பெருமையையும் இதுவரை சொன்னாய். திருக்குற்றால மூர்த்தியின் சிறப்பும் நின் சொற்கள் தோறும் விளங்குவதை நீ உரைத்த முறைமையினாலேயே நானும் அறிந்தேன். இனிக் குறும்பலாவினடியிலே வீற்றிருப்ப வருடைய கீர்த்தி விசேடங்களையும் பெரிதான உறவினர் களின் விசேடங்களையும் எனக்குச் சொல்லுவாயாக!” இவ்வாறு வசந்தவல்லியானவள் குறவஞ்சியினிடம் கேட்கிறாள்.