பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 99

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தீர்த்தவிசேடமுந்தலத்தின் சிறந்தவிசே

டமும் உரைத்தாய் திருக்குற்றால மூர்த்திவிசேடந்தனையும் மொழிதோறும் நீயுரைத்த முறையிற் கண்டேன். வார்தைவிசேடங்கள் கற்ற மலைக்குறவஞ்

சிக்கொடியே வருக்கை வாசர் கீர்த்திவிசேடம்பெரிய கிளைவிசே

டத்தைஇனிக் கிளத்து வாயே.

14. கிளை விசேடம் கூறுதல் அடி அம்மையே குற்றாலநாதரின் சுற்றத்துச் சிறப்புகளை எல்லாம் நீ கேட்டபடியே கூறுகின்றேன்; கேட்பாயாக: அவருடைய குலத்தினைப் பார்த்தோமானால் எல்லாத் தேவர்களையும் காட்டிலும் பெருமையுடைய குலமாகும். "அவரைப் பெற்ற தாய் எவரோ? தந்தை எவரோ?” என்றெல்லாம் உன்னிப்புடனே என்னை நீ கேட்பாயானால், அவற்றை யான் அறியேன். அவருக்குப் பெண் கொடுத்தானே மலையரசன், அவனைத்தான் கேட்டு நீ தெரிந்து கொள்ளல் வேண்டும். சிறப்புப் பொருந்திய ஒப்பற்ற பனிமலையினனாகிய வெற்றி வேந்தனுக்கும் உயர்வுடைய மதுரை நகருக் குரியவனாகிய பாண்டியனுக்கும் இவர் வெற்றிச் சிறப்புடைய மருமகனார் ஆவர். பாற்கடலிலே பாம்பணையிலே உறங்கிக் கொண்டிருக்கும் வெற்றி கொள்ளும் சிறப்புடையோனான திருமாலுக்குக் கண்ணுக்குக் கண்ணான மைத்துனரும் இவர், அம்மையே! இராகம் - முகாரி தாளம் - ஏக தாளம் கண்ணிகள் குற்றiலர் கிளைவளத்தைக் கூறக்கேள் அம்மே

குலம்பார்க்கில் தேவரினும் பெரியகுலம் கண்டாய் பெற்றதாய் தந்தைதனை உற்று நீ கேட்கில்

பெண் கொடுத்த மலையரசன் தனைக் கேட்க வேணும்