பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் பாடியருளிய

திருக்குற்றாலக் குறவஞ்சி மூலமும் உரையும்

1. கடவுள் வணக்கம்

1. கைவலான் காவலான்

அழகு மலிந்த பூக்கள், இதழ் விரிந்த புத்தம் புது மலர்கள்; இவற்றால் தொடுக்கப்பெற்ற மாலையினைப் புனைந் திருப்பவர், திருக்குற்றாலத்திலே கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான்.மலர்களுக்கு அரசு தாமரைமலர்; அதுபோன்ற செம்மையும் மென்மையும் அழகும் உடையன அவருடைய திருப்பாதங்கள். அந்தத் திருப்பாதங்களைப் போற்றி, திருக்குற்றாலக் குறவஞ்சி ஆகிய, இந்த முத்தமிழ் நாடகத்தைப் பாடுவதற்குத் தொடங்குகின்றேன்.

மிகுதியாகப் பெருகி வழியும் மதநீரானது, அருவி நீரினைப் போல இழிந்து பாய்கின்றவன், மலையோ!' என்று சொல்லும்படியாக ஓங்கி வளர்ந்த கரிய திருமேனியினை உடையவன்; விநாயகப் பெருமான். வேண்டுபவருக்கு வேண்டியன எல்லாம் தருவது கற்பகத்தரு, அந்தத் தருவே ஒன்றுக்கு ஐந்தாக வந்து வாய்த்திருப்பனபோல ஐந்து திருக்கைகளை உடையவன் அவன். அந்தக் கைகள் மிகுந்த வள்ளன்மை உடையனவும் ஆகும். அத்தகைய அருளாள னாகிய விநாயகப் பெருமான், எனக்கும் காவலனாக அமைந்து, என்னுடைய இந்த முயற்சி இனிது நிறை வெய்துவதற்கு உதவுவானாக! (இப்படி, விநாயகப் பெருமானை வேண்டுகிறார் கவிஞர்)