பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 103

பெற்றேன். பல திசைகளையும் வென்று நான் பெற்றிருக்கின்ற விருதுகளையும் c இதோ காண்பாயாக இராகம் - தோடி தாளம் - ஆதி பல்லவி வித்தாரம் என்குறி அம்மே! - மணி முத்தாரம் பூணும் முகிழ்முலைப் பெண்ணே வித்தாரம் என்குறி அம்மே!

சரணங்கள் வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு

மக்கம் மராடந் துலுக்காணம் மெச்சி செஞ்சி வடகாசி நீளம் சீனம்

சிங்களம் ஈழம் கொழும்புவங்காளம் தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்

சங்க மதுரைதென் மங்கலப் பேட்டை மிஞ்சு குறிசொல்லிப் பேராய்த் திசை

வென்றுநான் பெற்ற விருதுகள் பாராய்.(வித்தாரம்) (வித்தாரம் - பெருமையுடையது. மணி - நவமணிகள். மக்கம் - மெக்கா, அராபிய நாடு. மிஞ்சு குறி - மேலான குறி)

(2) நன்னகராகிய இத் திருக்குற்றால நகரிலே, எங்கும் தன் பெரும்புகழை நிலை நாட்டிய கொல்லம் எண்ணுற்று எண்பத்தேழாம் ஆண்டிலேயே, பதஞ்சலி மாமுனிவர் போற்றும் வண்ணம் தமிழ் வளர்த்த பாண்டியனார், முதன் முதல் சிறிய கூரை ஒடுகள் வேய்ந்த அழகு பொருந்திய சித்திரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு வேய்ந்தனன். அதற்கு முன்பாக, அவனுக்குக் குறி சொல்லி நான் பரிசாகப் பெற்ற இந்த மோகனமாலையினை, மோகவல்லியே நீ பார்ப்பாயாக. அதனால், மிகவும் வித்தாரம் பொருந்தியது என் குறி அம்மையே!

நன்னகர்க் குற்றாலத் தன்னில் எங்கும்

நாட்டும் எண்ணுற்றெண்பத் தேழாண்டு தன்னில் பன்னக மாமுனி போற்றத் தமிழ்ப்

பாண்டிய னார்முதற் சிற்றோடு மேய்ந்த