பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

தென்னாரும் சித்ரசபையை எங்கள்

சின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த முன்னாளி லேகுறி சொல்லிப் பெற்ற

மோகன மால்ைபார் மோகன வல்லி (வித்தாரம்) (3) அதற்கு வடகீழ்த் திசையிலே, கொல்லத்து ஆண்டு நானூற்று நாற்பத்து நாலிலே, அன்பாகத் தென்காசி ஆலயமானது சிறந்து ஓங்கும்படியாகச், செண்பகமாற பாண்டியனுக்குக் குறி சொன்ன பேர்களும் நாங்களே யாவோம். நல்ல பாண்டிய நாடானது உய்யும்படியாகச் சொக்கநாயகர் வந்து மணக்கோலம் செய்வதற்கு முன், மதுரை மீனாட்சியம்மை யானவள் இன்பமுடன் எங்களைக் குறி கேட்டதற்கு, மதுரைச் சங்கத்தார்களே சாட்சியுரைப்பார்கள். அதனால், மிகவும் வித்தாரமுடையது என் குறி அம்மையே!

அன்பாய் வடகுண பாலிற் கொல்லத்து

ஆண்டொரு நானுற்று நாற்பத்து நாலில் தென்காசி ஆலயம் ஓங்கக் குறி

செண்பக மாறற்குச் சொன்னபேர் நாங்கள் நன்பாண்டிராச்சியம் உய்யச் சொக்க

நாயகர் வந்து மணக்கோலஞ் செய்ய இன்பா மதுரை மீனாட்சி குறி

எங்களைக் கேட்டதும் சங்கத்தார் சாட்சி. (வித்தாரம்)

- 17. எனக்கு ஒரு குறி! நின்னுடன் கலந்து மகிழ்வதற்குக் காமதேவனே வரவேண்டுமென நீ விரும்பினாலும், விழிப்பார்வையாகிய வாளினைக் கொண்டு அக் காமனையும் நின் வசமாக்கிக் கொள்ளக் கூடியவளே! நின்னுடைய குலவித்தை குறி சொல்லுதலே யாகுமானால், குறவஞ்சி! எனக்கும் ஒரு குறைவைத்தோ சொல்லப் போகின்றாய? பலாமரத் தினுள்ளே விளங்கும் கனியினைப் போல, என்னுள்ளே நிலை பெற்றிருக்கும் குற்றாலநாதருடைய நாட்டினிலே, இலவம் பூவினும் சிவந்த நின் வாயினால், எனக்கும் ஒரு குறியினைச் சொல்லுவாயாக.