பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 105

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கலவிக்கு விழிவாள் கொண்டு

காமனைச் சிங்கி கொள்வாய் குலவித்தை குறியே ஆனால்

குறவஞ்சி குறைவைப் பாயோ பலவுக்குள் கனியாய் நின்ற பரமர்குற் றாலர்நாட்டில் இலவுக்கும் சிவந்த வாயால்

எனக்கொரு குறிசொல் வாயே.

18. குறி ஏற்பாடுகள் அம்மே! என்ன குறியானாலும் நான் சொல்லுவேன் அம்மே! இதற்காகச் சபை ஏறவும் செய்வேன்.என்னை எதிர்த்த பேர்களை வெல்லவும் செய்வேன். மன்னவர்கள் கூட மெச்சுகின்ற குறவஞ்சி நான். என் வயிற்றுக்கு இத்தனை கஞ்சிபோதும். அதனை நீ வார்ப்பாயாக, அம்மையே! எந்த வேறுபாடும் இல்லாமல் கூழானாலும் அதனைக் கொண்டு வந்தால் என் பெரிய குடுக்கை நிறையக் குடித்து விடுவேன் அம்மே! அதன்பின் தின்பதற்கு வெற்றிலையும் வெட்டுப் பாக்கும் அள்ளித் தருவாயாக. கப்பலிலே வந்திறங்கும் சீனத்துச் சரக்கான புகையிலையிலும் கொஞ்சம் கிள்ளித் தருவாயாக, அம்மையே! இராகம் - அடாணா தாளம் - ஆதி கண்ணிகள் என்னகுறி யாகிலும்நான் சொல்லுவேன் அம்மே-சதுர் ஏறுவேன் எதிர்தத பேரை வெல்லுவேன் அம்மே! மன்னவர்கள் மெச்சுமொரு வஞ்சிநான் அம்மே! - என்றன் வயிற்றுக்கித் தனைபோதும் கஞ்சிவார் அம்மே. பின்னமின்றிக் கூழெனினும் கொண்டுவா அம்மே!பெரிய குடுக்கை முட்ட மண்டுவேன் அம்மே. வந்தால் தின்ன இலையும்பிளவும் அள்ளித்தா அம்மே - கப்பற் சீனச்சரக் குத்துக்கிணி கிள்ளித்தா அம்மே. '4