பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

(பெரிய குடுக்கை - பெரிய வயிறும் ஆம். புகையிலை அந்நாளிலே சீனத்திலிருந்து கப்பலிலே வந்திறங்கியதால் போலும் சீனச் சரக்கு என்கிறார்.)

அம்மே! அம்மே! நான் குறிசொல்வதைக் கேட்பதற்கு வருவாயாக. உனக்கு ஆக்கம் வருகுது பார். வெள்ளச்சி அம்மையே! விம்முகின்ற கொங்கைகளையுடைய கன்னி ஒருத்தி அதோ பேசுகின்ற பேச்சு நல்ல சகுனமாயிருக்கிறது. நேரே மேற்குப் புறத்திலே ஆந்தை வீறிட்ட குரலும் மிகவும் நல்லது. அம்மையே! தும்மலும் காகமும் இடப்புறமாகச் சொல்லுதே சரம் மிகவும் நுட்பமாகப் பூணரத்தை வெற்றி கொள்ளுதே! இவை எல்லாம் மிகவும் செம்மையான நல்ல நிமித்தங்கள் பாராய். திரிகூட மலைத் தெய்வத்தின் அருள் உறுதியாக உனக்கு உண்டாகும் அம்மே!

அம்மேயம்மே சொல்லவாராய் வெள்ளச்சி அம்மே - உனக்கு

ஆக்கம் வருகுதுபார் வெள்ளச்சி அம்மே விம்முமுலைக் கன்னிசொன்ன பேச்சு நன்றம்மே - நேரே

மேற்புறத்தில் ஆந்தையிட்ட வீச்சுநன்றம்மே தும்மலுங்கா கமுமிடம் சொல்லுதே அம்மே சரம் சூட்சமாகப் பூரணத்தை வெல்லுதே அம்மே செம்மை இது நல்நிமித்தம் கண்டுபார் அம்மே - திரி

கூடமலைத் தெய்வமுனக் குண்டுகாண அம்மே! 8 (சரம்-மூச்சுகள் இடது நாசித்துவாரத்தினும், வலது நாசித் துவாரத்தினும் ஏறுவதை ஒட்டி ஞானசரநூல் என்றவொரு குறி நூல் உள்ளது. அப்படிச் சரம் பார்த்து அதுவும் நல்ல நிமித்தம் என்கிறாள்.)

19. மாப்பிள்ளை வருவான்!

பூங்கொடியே பல்லியும் பலபலவென்று நல்ல நிமித்தம் சொல்லுகிறது. திரிகூட நாட்டிலேயே கல்விமானாகவும் மிகுந்த சிவப்பு நிறமுடையவனாகவும், கழுத்தின்மேல் கறுப்பு மச்சம் ஒன்று உள்ளவனாகவும், நல்ல மேற்குலத்தினனாகவும் இந்த நன்மை பொருந்திய ஊரினனேயாகவும், உனக்கு