பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ു கேசிகன் 107

நல்லவனான மாப்பிள்ளை ஒருவன் வந்து விரைவிலே வாய்ப்பான்.

விருத்தம் பல்லியும் பலபலென்னப் பகருது திரிகூடத்தில் கல்விமான் சிவப்பின் மிக்கான் கழுத்தின்மேல் கறுப்பும் உள்ளான் நல்லமேற் குலத்தான் இந்த நன்னகர்த் தலத்தானாக வல்லியே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே! 20. குறி சொல்லவா?

தரையினை மெழுகிக் கோலம் இடுவாயாக. முறை யாகப் பிள்ளையார் உருவைப் பிடித்து வைப்பாயாக. நிறைகுடம் எடுத்து வைப்பாயாக வாழை, மா, பலா ஆகிய முப்பழங்களும் படைப்பாயாக தேங்காயையும் உடைத்து வைப்பாயாக.

அருகம்புல்லும், தண்ணிரும், விளக்கும் கொண்டு வைப்பாயாக. பாக்கும் வெற்றிலையும் கொண்டு வருவாயாக வடை, அப்பம், அவல் ஆகியவற்றுடன் சர்க்கரையும் எள்ளுருண்டையும் பொரியும் கொணர்ந்து வைப்பாயாக

நிறை நாழியிலே நெல்லினை அளந்து வைப்பாயாக. இறையவனைக் கரங்குவித்து வணங்குவாயாக குறியின் நிலவரத்தை உன் உள்ளத்திலே தெளிந்து கொள்வாயாக

பிறைபோன்ற நெற்றியினை உடையவளே! இவ்வளவும் செய்தாயிற்றா? இப்போது நான் சொல்லட்டுமோ? நம் தலைவர், குறும்பலாவிலே கோவில் கொண்டிருப்பவர்; அவருடைய திருவுளத்தால் உனக்குப் பெரும்பலனாக விளங்கும் குறியினைச் சொல்லட்டுமோ! இராகம்-பூரீராகம் தாளம்-அடதாளம், சாப்பு

கண்ணிகள் தரைமெழுகு கோலமிடு

முறைபெறவே கணபதிவை அம்மே குடம் தாங்காய்முப் பழம்படைப்பாய்

தேங்காயும் உடைத்து வைப்பாய் அம்மே! 1