பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

அருகுபுனல் விளக்கிடுவாய்

அடைக்காய்வெள் ரிலைகொடுவா அம்மே!வடை அப்பம் அவல் வர்க்கவகை

சர்க்கரையோ டெட்பொரிவை அம்மே! 2 நிறைநாழி அளந்துவைப்பாய்

இறையோனைக் கரங்குவிப்பாய் அம்மே!குறி நிலவரத்தைத் தேர்ந்துகொள்வாய் குல

தெய்வத்தை நேர்ந்துகொள்வாய் அம்மே! 3 குறிசொல்லவா! குறிசொல்லவா?

பிறைநுதலே குறிசொல்லவா அம்மே! ஐயர் குறும்பலவர் திருவுளத்தாற்

பெரும்பலனாம் குறிசொல்லவா அம்மே! 4 (குறி சொல்லத் தொடங்குவதற்கு முன்னர் இப்படி முறையாக முதலில் விநாயகரை வழிபட்டுப் பின்னரே தொடங்குவது மரபு. அப்படியே குறவஞ்சியும் வசந்த வல்லிக்குக் குறி சொல்லத் தொடங்குகின்றாள்.)

21. கைம் மலர் காட்டாய் ஆன் ஏற்றிலே ஊர்ந்து வருகின்ற செல்வர் திரிகூட நாதர். அவருடைய அழகிய திரிகூட நகரத்திலே வாழுகின்ற மானே! வசந்தப் பசுங்கொடியே! நான் வந்தவேளை மிகவும் நன்றாகவே இருக்கின்றது. நீ இருந்த இடமும் மிகவும் நல்ல இடமேயாகும். செழுமையான தாமரைமலர் போல மணமிகுந்த நின் கைம்மலரை, நின் மனத்திலுள்ளவை பற்றி நான் குறிசொல்லுவதற்காக இப்படி என்னிடம் காட்டு հ)IITԱյրI55,

கட்டளைக் கலித்துறை ஆணேறுஞ் செல்வர்திரிகூட நாதர் அணிநகர்வாழ் மானே வசந்தப் பசுங்கொடியேவந்த வேளைநன்றே தானே இருந்த தலமும்நன்றேசெழுந் தாமரைபோல் கானேறும் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே.