பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 O திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

வாழிடமாகக் கொண்ட, அவர் பேரிலே ஆசை கொண்டவள் வசந்தவல்லி. அவளுடைய கைரேகைகளைப் பார்த்து விழிக் கனியைப் போன்று செம்மை கனிந்த வாயினளான அழகிற் சிறந்த குறவஞ்சியானவள், வசந்தவல்லி அன்போடு அளித்த பழைய கூழினை உண்டதன் வாயினால் குறியினை விரிவாகச் சொல்வாளாயினாள்.

கொச்சகக் கலிப்பா

ஏழைபங்கர் செங்கைமழு

வேற்றவர்குற் றாலர்வெற்பில் வாழிகொண்ட மோக

வசந்தவல்லி கைபார்த்து வீழிகொண்ட செங்கனிவாய் மிக்ககுற வஞ்சிபழம் கூழையுண்ட வாயாற்

குறியைவிண்டு சொல்வாளே. (வாழிகொண்ட - வாழிடமாகக் கொண்ட வீழி - கொவ்வைக்கனி, மிக்க குறவஞ்சி-அழகுமிக்க குறப்பெண். விண்டு - விரிவுபடுத்தி)

23. கைகளின் சிறப்பு

பெரிய இந் நிலவுலகத்திலே சற்றும் மாறுபடாமல் அறம் வளர்க்கும் கை இந்தக் கையே. மனையறத்தின் மூலம் தர்மங்களை மிகுதியாகச் செய்து உறுதிப் பொருளாகிய புகழினை வளர்ப்பதும் இந்தக் கையே மேம்பாட்டுடன் நவ நிதிகளையும் பெருக்குவதும் இந்தக் கையே! மென்மேலும் பாலமுதம் அளைவதும் இந்தக் கையே! பசியாறாத சனங்களின் பசியாற்றுவதும் இந்தக் கையே தேவமாதர்களை யொத்த பெண்கள் தினமும் வணங்கிப் போற்றுவதும் இந்தக் கையின் வளமே பெறுதற்குரிய பெரும் பேறாக விளங்கி இந்த நல்ல நகரத்தைக் காத்து உதவுவதும் இந்தக் கையே! பிறவாத தன்மையினையுடைய குற்றாலநாதர் ஒருவருக்கே பொருத்த மானதும் இந்தக் கையே!