பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 113

இவள் மீதுள்ள தம் ஆசையைச் சொல்லிவிட்டதன் காரணமோ? இக் கன்னியானவள் மற்றொருவர் மீது மோகங் கொண்டு விட்டதன் அடையாளமோ? சேலை நெகிழவும் வளையல்கள் கழலவும் அதனால் ஏற்பட்ட திகைப்போ? மாலையும் திருமணமும் விரைவிலே வந்து வாய்ப்பதற்குரிய அடையாளமோ? இத்தனை குறிகளிலே இவளுடைய குறி இதுவே என்று அவள் மனத்திலே வைத்துள்ள குறியினை எனக்குக் காட்டி அருள்வீர்களாக!

நிலைமண்டில ஆசிரியப்பா குழல்மொழி இடத்தார் குறும்பலா உடையார் அழகுசந் நிதிவாழ் அம்பல விநாயகா செந்தில்வாழ் முருகா! செங்கண்மால் மருகா கந்தனே இலஞ்சிக் கடவுளே சரணம் புள்ளிமான் ஈன்ற பூவையே குறக்குல 5 வள்ளிநாயகியே வந்தெனக் குதவாய் அப்பனே மேலை வாசலின் அரசே செப்பரு மலைமேல் தெய்வகன் னியர்காள் ஆரியங் காவா அருட்சொரி முத்தே நேரிய குளத்தூர் நின்ற சேவகனே 10 கோலமா காளி குற்றால நங்காய் - கால வைரவாகனதுடிக் கறுப்பா முன்னோடி முருகாவன்னிய ராயா மன்னிய புலிபோல் வரும்பன்றி மாடா எக்கலா தேவி துர்க்கை பிடாரி - 15 மிக்கதோர் குறிக்காய் வேண்டினேன் உங்களை வந்துமுன் னிருந்து வசந்தமோ கினிப்பெண் சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ சலவையோ பட்டோ தவச தானியமோ கவலையோ புழுகோ களபகத் துரியோ 20 வட்டிலோ செம்போ வயிரமோ முத்தோ கட்டிலோ மெத்தையோ கட்டி வராகனே