பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

வைப்பொடு செப்போ வரத்தொடு செலவோ கைப்படு திரவியம் களவுபோனதுவோ மறுவிலாப் பெண்மையின் வருந்திட்டி தோசமோ 25 திரிகண்ணர் ஆனவர்செய்தகைம் மயக்கமோ மன்னர்தாம் இவள்மேல் மயல்சொல்லி விட்டதோ கன்னிதான் ஒருவர்மேற் காமித்த குறியோ சேலையும் வளையும் சிந்தின தியக்கமோ மாலையும் மணமும் வரப்பெறுங் குறியோ 30

இத்தனை குறிகளில் இவள்.குறி இதுவென

வைத்ததோர் குறியை வகுத்தருள் வீரே. (இடத்தார் - இடப்பாகமாக உடையவர். இலஞ்சிக் கடவுள் - திரு இலஞ்சி முருகன். பூவை - நாகணவாய்; இங்கே பெண். சொரி முத்து சொரிமுத்தய்யன், ஐயனார். சேவகன் - வீரம் உடையவன். கனதுடி - பெருந்துடிப்பு. சீவனோ - உயிருள்ளவையோ. தாதுவோ - உயிரில் பொருளோ. தவச தானியம் - தானியங்களும் தவசங்களும், தவசங்கள் - புன்செய்ப் பொருள்கள். கட்டி வராகன் - கட்டித் தங்கமான பவுன். வைப்பு - புதையல். திட்டி - கண் திருஷ்டி கைம் மயக்கம் - சிறு மயக்கம்.)

26. சொல்லப் போகிறேன்!

அம்மையே! கடித்திடும் பாம்பினை அணியாகப் பூண்டிருக்கும் கர்த்தர் குற்றாலநாதர். அவருடைய நேசம் வந்து பிடிக்கிறது. இந்தக் கருத்து மிகவும் நன்றாக வந்து பேசுகிறது. சொல்லு சொல்லு' என்று என் உதடுகளிலும் நாவிலும் சக்கதேவ வந்துநின்று துடிக்கின்றது. குறளிப் பேய் வந்து என் வாயிலே சொல்லச் சொல்லி இடிக்கிறது.இனிக்குறி சொல்லுகிறேன், கேட்பாயாக

விருத்தம் கடித்திடும் அரவம் பூண்ட

கர்த்தர்குற் றாலர் நேசம் பிடிக்குது கருத்து நன்றாய்ப்

பேசுது சக்க தேவி