பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

28. மீண்டும் வினவுதல் நன்றாயிருக்கிறது குறவஞ்சியே! நீ ஒரு பெரிய நாடகக் காரி. இந்த நாட்டிலேயுள்ளவர்க்குத் தக்கவாறு நீ பேசும் வார்த்தைகளை நான் அறியேன் என்று நினைத்தாயோ? முதலிலே ஒன்றும் விடாமல் குறி சொல்லி வந்தாய். பின்னர் குறியை உழப்பிப் போட்டாய் குழப்பிப் போட்டாய். திருவிழாவிலே வரும் சேனையைக் கண்ட பயத்தால் இந்த மயக்கமும் கிறுகிறுப்பும் பெண்களுக்கு வருவதுண்டோ? இன்று வரைக்கும் உடலிலே குளிரும் காய்ச்சலும் இருப்பது முண்டோ? பின்னே, அவை ஏற்பட்டது எந்த வகை? அதனை ஆராய்ந்து பார்த்துக் குறி சொல்லடி!

கண்ணிகள் நன்றுநன்று குறவஞ்சி நாடக்காரி - இந்த

நாட்டானபேர்க் கானவார்த்தை நானறியேனோ ஒன்றுபோ டாமற்குறி சொல்லியேவந்தாய் - பின்னை

உழப்பிப்போட் டாய்குறியைக் குழப்பிப் போட்டாய் மன்றல்வருஞ் சேனைதனைக் கண்டுபயந்தால் - இந்த

மையலுங் கிறுகிறுப்பும் தையலர்க் குண்டோ இன்றுவரை மேற்குளிரும் காய்ச்சலும் உண்டோ - பின்னை

எந்தவகை என்றுகுறி கண்டு சொல்லடி!

29. காமக் காய்ச்சலடி! ஆனேறாகிய தன் வாகனத்திலே ஏறிவருகின்ற யோக புருஷன்; அவனுடைய கோலாகலமான திருவுலாவினைக் காண ஆசை கொண்ட பெண்களுக்குள்ளே தோகையே! நீ அவனைக் கண்டு அவன் மீது மோகங் கொண்டாய் அம்மையே. அதனைச் சொல்லப் பயந்திருந்தேன். இப்பொழுது நின்முன் வெளிப்படையாகச் சொல்வேன் கேட்பாயாக காகம் அணுகாத திரிகூடமலைக்கு உன்மேல் எவ்விதக் காய்ச்சலும் கிடையாது. நீ கொண்டிருப்பது காமக் காய்ச்சல் என்றறிவாயாக. மோகினியே! உன்னுடைய கிறுகிறுப்பெல்லாம் அவனுடைய மோகத்தால் ஏற்பட்ட கிறுகிறுப்படி மோகனக் கள்ளி!