பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

V. சிங்கனும் சிங்கியும்

1. சிங்கியைத் தேடி வருகிறான்

கவிஞர்களின் பாமாலைகள் பலவற்றையும் பூண்ட வரான திரிகூடத்து இறைவரின் அருளினைப்பெற்ற வசந்த வல்லியினது கூந்தலானது கொன்றைமலர் மாலையினை அணியப் பெற்றது. அதனால் களிப்புற்ற அவள் கொடுத்த பொன்மாலை மணிமாலை ஆகியவற்றை மிகவும் அழகுடன் அணிந்து கொண்டவளாக, வாய்ப் பேச்சிலே வல்லவளான குறவஞ்சியானவள் குற்றாலநகர்ப் பட்டணம் முழுவதிலுமே திரிந்து கொண்டிருந்தனள். அந்த நாள்களிலே அவள் பேரில் பெருங்கோபம் கொண்ட அவள் காதலனான சிங்கன் என்பவன், தன் அன்புக்கு உரியவளான அச் சிங்கியைத் தேடிக் கொண்டு, அவ்விடத்திற்கு வருகின்றான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாமாலைத் திரிகூடப் பரமரருள்

பெருவசந்தப் பாவை கூந்தல் பூமாலை இதழிபெறப் பொன்மாலை

மணிமாலை பொலிவாய்ப் பூண்டு நாமாலைக் குறவஞ்சி நன்னகர்ப்பட்

டணமுழுதும் நடக்கும் நாளில் மாமாலைப் பூண்டசிங்கன் வங்கணச்சிங்

கியைத்தேடி வருகின்றானே. (பாமாலை - பாக்களாகிய மாலைகள். பரமன் - இறவைன். வசந்தப்பாவை - வசந்தவல்லி. பொன்மாலை - தங்கச்சங்கிலி, மணிமாலை - நவரத்தினமாலை. நாமாலை - வாய்ப் பேச்சாகிய மாலை. மாமாலை - பெரிய மோகத்தினை. சிங்கன் - குறவனின் பெயர். சிங்கி - குறத்தியின் பெயர்)