பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 121

2. சிங்கனின் தோற்றம் வக்காவினுடைய மணியினாற் கோக்கப் பெற்ற ஆரத்தை அணிந்துகொண்டு, கொக்கிறகுகளைத் தன் சிகையிலே சூடிக் கொண்டு, புலித்தோலாகிய கச்சையினை இடுப்பிலே அடுக்கடுக்காக வரிந்து கட்டிக்கொண்டு, தன்னைத் தொடர்ந்த புலியைக் கண்டதும் உறுக்கிப் பார்த்தே அதை ஒடச் செய்துவிட்டுத் தோளிலே அம்பறாத் துணியைத் தொங்க விட்டுக் கொண்டவனாகக், கைக்கான ஆயுதங்கள் பல வற்றையும் எடுத்துக்கொண்டு, வளை தடியையும் எடுத்துக் கொண்டு, வலையையும் தோளிலே போட்டுக்கொண்டு, எட்டுத் திசைகளுக்கும் அடங்காத ஆற்றலுடைய குளுவனாகிய சிங்கன் என்பவன், குற்றாலத் திரிகூட மலையிலே வந்து கொண்டிருந்தான். ".

வக்காவின் மணிபூண்டு கொக்கிறகு

சிகைமுடித்து, வரித்தோற் கச்சைத் தொக்காக வரிந்திறுக்கித் தொடர்புலியைக்

கண்டுறுக்கித் துணிதுக்கிக் கைக்கான ஆயுதங்கள் கொண்டுசில்லிக் கோலெடுத்துக் கண்ணி சேர்த்துத் திக்கடங்காக் குளுவசிங்கன் குற்றாலத்

திரிகூடச் சிங்கன் வந்தான். (வக்கா - கொக்கு வகைகளிலே பெரிதான ஒரு வகை. சிகை - தலைமுடி வரித்தோல் - புலித்தோல். சில்லிக்கோல் - வளைதடி. மிருகங்களை இதனால் எறிந்து கொல்லுவர்; மீண்டும் எறிந்தவரிடம் அத்தடி திரும்பி வந்துவிடும்) 3. மலைக் குறவன்!

வக்காவின் மணியினைச் சூடியவனாக, பெரிய சாகசக் காரியான தன் சிங்கி மீண்டு வந்து கொண்டிருக்கும் வழியைத் தேடிக்கொண்டு, ஆற்றல் மிக்கவான புலிகரடி முதலியவையும் கிடுகிடுவென நடுங்குமாறு அவற்றை வெறித்து நோக்கிய வாறே, கக்கா என்று ஓலமிடுகின்ற குருவி கொக்கு ஆகியவற்றைப் பிடிப்பதற்குப் பொருத்தமான கண்ணி