பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

யினையும் தன் கையிலே கொண்டவனாகத் துள்ளுநடை நடந்துகொண்டே, திரிகூடமலைக் குறவனான சிங்கன் வந்து தோன்றினான்.

வக்காவின் மணிசூடி வகைக்காரி

சிங்கிவரும் வழியைத் தேடி மிக்கான புலிகரடி கிடுகிடென

நடுநடுங்க வெறித்து நோக்கிக் 'கக்கா என்றோலமிடும் குருவிகொக்குக் கேற்றகண்ணி கையில் வாங்கித் தொக்கான நடைநடந்து திரிகூட

மலைக்குறவன் தோன்றி னானே. (வெறித்து நோக்குதல் - உறுத்து நோக்குதல், கண்ணி - வலை. தொக்கான நடை - துள்ளுநடை, வேட்டையாடுதற்குப் பொருத்தமான நடையும் ஆம்)

4. திரிகடச் சிங்கன்! கொக்கிறகைத் தன் சிகையிலே சூடிக் கொண்டு குருவி வேட்டைகளை ஆடிக்கொண்டு வக்காவின் மணியினைப் பூட்டிக் கொண்டு மடவார்களின் கண்களைப்போல விளங்கும் கூர்மையான ஈட்டியைக் கையிலே எடுத்துக் கொண்டு, அடுக்கடுக்காகக் கச்சையினை இறுக்கிக் கட்டிக் கொண்டு, துடிக்கிற தன் மீசையினை முறுக்கி விட்டுக் கொண்டு, எட்டுத் திக்குகளிலும் அடங்காத குளுவச் சிங்கனாகிய திரிகூடச் சிங்கன் வந்து கொண்டிருந்தான். இராகம் - அடாணா தாளம் - சாப்பு கண்ணிகள் கொக்கிறகு சூடிக் கொண்டு

குருவிவேட்டை ஆடிக்கொண்டு வக்காமணி பூட்டிக் கொண்டு

மடவார்கண்போல் ஈட்டி கொண்டு தொக்காக் கச்சை இறுக்கிக் கொண்டு துள்ளுமீசை முறுக்கிக் கொண்டு