பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

அடியவர்கள் ஆர்வங்கொள்ளுகின்ற சிவயநம என்னும் பஞ்சாட்சர மந்திரத்திற்கு உரியவர் திருக்குற்றால நாதர். அவருடைய அருளைத் தருகின்ற திருநீற்றினை அணியாத வர்களுடைய கைகளின் நரம்பை வெட்டி எடுத்துக் கின்னரம் என்னும் யாழிலே நரம்பாகத் தொடுத்துக் கொண்டு அந்தப் பாதகர்களின் தோலினால் பலவகைத் தவில்களைச் செய்து, அவற்றை அடித்துக் கொண்டே, பறவைகளைப் பிடிக்கின்ற குறவன் என்று சொல்லப்படுகிறவனும் நானேதான்!

தம் சடையினிலே இளம்பிறையினை உடையவர்: குறும்பலாவினடியிலே கோவில் கொண்டிருப்பவர்; அவருடைய பெருமையினை உள்ளத்திலே கொண்டு அவரை வணங்காத பேர்களினுடைய குடுமியினைப் பிடித்து, அதன் பாலுள்ள பல மயிர்களையும் நறுக்கிப் போட்டுச் சில வலைக்கண்ணிகளாக அவற்றை முறுக்கிப், பறவைகள் பிடிக்கின்றவன் என்று கூறப்படும் குளுவனும் நானேதான்!

ஒரு காதணி சங்கத்தாலமைந்தது; மற்றொரு காதணி தங்கத்தாலாகியது; இப்படி அணிந்திருக்கும் விநோதமான இயல்பினையுடையவர் நம் திரிகூடநாதர். அவருடைய திருநாமங்களைப் போற்றித் துதித்துத் திருநீறு சாத்தும் வழக்கமுடைய திரிகூடன் என்னும் நாமத்தையுடைய சிங்கனும் நானேதான்!

இராகம் - தன்யாசி தாளம் - ஆதி கண்ணிகள் தேவருக்கு அரியார் மூவரிற் பெரியார் சித்திர சபையார் சித்திரா நதிசூழ் கோவிலிற் புறவில் காவினில் அடங்காக்

குருவிகள் படுக்கும் குளுவனும் நானே! 1

காதலஞ் செழுத்தார் போதநீ றணியார்

கைந்நரம் பெடுத்துக் கின்னரம் தொடுத்தப்

பாதகர் தோலால் பலதவில்அடித்துப்

பறவைகள் படுக்கும் குறவனும் நானே! 2