பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 127

இராகம் - அடாணா தாளம் - சாப்பு கண்ணிகள் ஊர்க் குருவிக்குக் கண்ணியும் கொண்டு

உள்ளானும் வலியானும் எண்ணிக் கொண்டு மார்க்கமெல் லாம்பல பண்ணிக் கொண்டு

கோட்கார நூவனும் வந்தானே. 1 கரிக்குருவிக்குக் கண்ணியும் கொண்டு

கானாங் கோழிக்குப் பொறியும் கொண்டு வரிச்சிலைக் குளுவரிற் கவண்டன் மல்லன்

வாய்ப்பான நூவனும் வந்தானே. 2 ஏகனை நாகனைக் கூவிக் கொண்டு

எலியனைப் புலியனை ஏவிக்கொண்டு வாகான சிங்கனை மேவிக் கொண்டு

வங்கார நூவனும் வந்தானே. 3 கொட்டகைத் தூண்போற் காலி லங்க

ஒட்டகம் போலே மேலி லங்கக் கட்டான திரிகூடச் சிங்கன் முன்னே

மட்டீவாய் நூவனும் வந்தானே. 4 (ஊர்க்குருவி - ஒருவகைக் குருவி. உள்ளான் - வலியான் - பறவையினங்களுள் சில. கோட்காரன் - தந்திரக்காரன். கானாங்கோழி - கானங்கோழி, வாகு - வலிமை)

8. பட்சி பார்த்தல் திரிபுரங்களாகிய மூவகையான கோட்டைகளும் அழிந்து போகும்படியாகத் தம் சிரிப்பினாலேயே வீர விளையாடலைச் செய்த ஆற்றலை உடையவர் திருக்குற்றாலர். அவருடைய அழகிய விளை நிலங்களினூடே, பாவனையாக, நூவன் பறவைகளைப் போல அவ்வவற்றின் குரலெடுத்துக் கூவினான். அப்போது, சிங்கன் அவ்விடத்திலேயே இருந்த ஒரு மரத்தின் மேலே ஏறி நின்று, அக்குரல்களைக் கேட்டு வந்து கொண்டிருக்கும் பறவை இனங்களை எல்லாம்

Lfffffff;45GM)fTGŪTĪTGğT.