பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மூவகை மதிலும் சாய மூரலால் வீரம் செய்த சேவகர் திருக்குற்றாலர் திருவிளையாட்டம் தன்னிற் பாவகம் ஆக நூவன் பறவைபோற் பறவை கூவ மாவின்மேலேறிச் சிங்கன் வரும்பட்சி பார்க்கின்றானே.

(மூவகை மதில்கள் - பொன், வெள்ளி, இரும்பினால் அமைந்த திரிபுரக் கோட்டைகள். மூரல் - சிரிப்பு. பாவகம் ஆக - அவ்வவற்றின் பாவனையாக. மா - மாமரம்).

9. பறவைகளின் வரவு பறவைகள் வருகின்றன. அப்பனே! பறவைகள் வருகின்றன. அப்பனே! பறவைகள் வருகின்றன. அப்பனே! திரிகூட நாதரின் வாட்டமில்லாத பண்ணைகள், பாட்டப் பற்றுகள் எல்லாம் குருவிகளும் நாரைகளும் அன்னங்களும் தாராக்களும் கூழைக் கடாக்களும் செங்கால் நாரைகளும் வந்து கொண்டிருக்கின்றன அப்பனே!

தம் திருச்சடையின் மீது புனற் கன்னியாகிய கங்கையை வைத்திருக்கும் திரிகூடநாதர் முன் காலத்திலே மலை மகளாகிய பார்வதியைத் திருமணஞ் செய்து கொண்ட காலத்திலே இமவானாகிய மன்னன் ஒருவன் அவருக்கு வேண்டிய வரிசைகளை எல்லாம் செய்தான். கங்கையை ஏற்றபோது யாரும் அப்படி வரிசை இடவில்லை. அதனால் அவளுக்கு நானே வரிசை செய்வேன் என்று அவளுடைய அன்னையான அன்புமிகுந்த ஆகாய கங்கையானவள் பள்ளியை நோக்கிப் புறப்பட்டு வருவது போன்ற அழகுடன் பொன்னிறமான வானத்தின் எம்மருங்கும் தம்முடைய நிறமாகவே தோன்றும்படி செய்து கொண்டு உலகத்தை வட்டமிட்டவாறே பறவையினங்கள் வந்து கொண் டிருக்கின்றன. அப்பனே!

காடைகள் வருகின்றன; கம்புள்கள் வருகின்றன; காக்கைகள் வருகின்றன; கொண்டைக் குலாத்திகள் வருகின்றன: மாடப்புறாக்களும் மயில்களும் வருகின்றன: மற்றொரு சாரியாகக் கொக்குக் கூட்டங்கள் எல்லாம்,