பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

பொன்னிற வானெங்கும் தந்நிற மாகப்

புரித்து புவனம் திரிந்து குருகினம் (வரு) காடை வருகுது கம்புள் வருகுது

காக்கை வருகுது கொண்டைக் குலாத்தியும் மாடப் புறாவும் மயிலும் வருகுது

மற்றொரு சாரியாய்க் கொக்குத் திரளெல்லாம் கூடலை உள்ளாக்கிச் சைவம் புறம்பாக்கிக் கூடும் சமணரை நீடும் கழுவேற்ற ஏடேதிர் ஏற்றிய சம்பந்த மூர்த்திக்கன்று

இட்டதிருமுத்தின் பந்தல்வந் தாற்போல (வரு) வெள்ளைப் புறாவும் சகோரமும் ஆந்தையும்

மீன்கொத்திப் புள்ளும் மரங்கொத்திப் பட்சியும் கிள்ளையும் பஞ்சவர் ணக்கிளிக் கூட்டமும்

கேகயப் பட்சியும் நாகண வாய்ச்சியும் உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும் ஒலஞ்செய் தேகூடி நாலஞ்சு பேதமாய்த் துள்ளாடுஞ் சூல கபாலர் பிராட்டியார்

தொட்டாடும் ஐவனப் பட்டாடை போலவே. (வரு) (பண்ணை - தோட்டங்கள். பாட்டப்புறங்கள் - வாரத்துக்கு விட்டுள்ள விளைநிலப் பகுதிகள். கூழைக் கடாக்கள் - பெரிய உருவுடைய கொக்கின்வகை. கிரிமாது - மலைமகள். வரிசை - சீதனவரிசை. அடுக்களை - உணவு சமைக்கும் அறை. புவனம் - உலகம், கம்புள் - கம்பங்கோழி, சகோரம் - சகோரப்பட்சி. கேகயப்பட்சி - மயில். நாலஞ்சுபேதம் - பலபேதம்; நவபேதமும் ஆம். துள்ளாடும் - துள்ளித் திருநடனம் இயற்றும். ஐவனப் பட்டாடை - பஞ்ச வண்ணப் பட்டாடிை) 10. சாயுது ஐயே! ஈராயிரங் கரங்களையுடையவனான பானுகம்பன் என்பவன் ஏந்திய சங்குகளும் நான்மறைகளும் சிறப்புடனே இசைமுழங்கிக் கொண்டிருக்கத் திருநடனம் செய்பவரான திருக்குற்றாலநாதரின் மலைச்சாரலிலே ஒராயிரம் திருமுகங்கொண்டு பாய்ந்து ஒடிச் சிறப்புப்பெற்ற கங்கா