பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

12. பறவைகள் மேய்தலைச் சொல்லுதல்

பற்வைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய் கின்றன ஐயே! திருக்குற்றாலநாதரின் பரந்த குலசேகரப் பேரிக் குளமும், ஆயிரப்பேரிக் குளமும், தென்காசிக் குளமும் எல்லாம் சுற்றிச் சுற்றி, அயிரையும், தேளியும், ஆரால் மீனும் கொத்திப் கொத்திப் பறவைகள் மேய்கின்றன ஐயே!

திருக்குற்றாலநாதரின் ஆலயத்தைச் சூழவும் திருமதில் மற்றும் திருப்பணிகளையும் கட்டி முடித்தவன்; அன்ன சத்திரம் கட்டியவன்; அஃதல்லாமல் தென்காசிப்பாலமும் கட்டியவன்; கோவிற் படித்தரங்களை அமைத்து அவற்றைச் சேமித்து வைப்பதற்கான சேரையும் கட்டியவன்; பக்த ஜனங்கள் அனைவரையும் காப்பதற்கென்றே கொடிகட்டித், திருமாலும் பிரமனும் போற்றிய குற்றாலநாதருக்கு வழி வழியாகத் தானும் தன் குடும்பமும் தொண்டு செய்திடக் கச்சைகட்டிக் கொண்டவளாகிய உத்தமன், கிளுவை நகரிலேயிருந்து மக்களைப் பரிபாலித்து வருகின்ற சின்ன ணஞ்சாத்தேவன் என்னும் கோமான். அவன் சிறு காலமாகிய தினம் ஆறுவேளைப் பூசைக்காக விட்டிருக்கின்ற திருத்துப் புறங்களிலெல்லாம் பறவைகள் வந்திறங்கி மேற்கின்றனவே, ஐயனே!

அந்தச் சின்னணஞ்சாத் தேவனுடைய படைத்தலை வனாக விளங்கியவன் வயித்தியப்பன் என்பவன். அவன் பெற்ற சைவக் கொழுந்தும் தர்மத்துக்கு ஒர் ஆலயமும் போன்றவன்;சேனைச் சவரிப் பெருமாள் பிள்ளையின் பின்னாக வந்து பிறந்தவன்; மகனாகிய மருதூர் வயித்தியப்பனுடன் பெருமையுடையவனாகிய குற்றால நாதனையும் பெற்றெடுத்தவன், வள்ளல் எனப் பலரும் போற்றும் பிச்சைப்பிள்ளை என்பவன். அவனுடைய வயல்களிலெல்லாம், கானக்குளத்துக்கு உள்வாயிலே இருக்கும் கீழைப் புதுக்குளம் கற்பூரக்காற் பற்று, தட்டான்குளச்சுற்று என்னுமிடங்களிலெல்லாம், பறவைகள் வந்து இறங்கி மேய்கின்றனவே, ஐயனே! -