பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

தேர்மேல் திருநாளும் தெப்பத் திருநாளும்

சித்திர மண்டபம் சத்திரம் சாலையும் பார்மேல் வளஞ்செய் அனந்த பத்மநாபன்

பாலன்வயித்திய நாதன் திருத்தெல்லாம் (மே) ஆறை அழகப்ப முதலியார் என்னும் பூபாலனின் கட்டளைகள், சிவநேசனாகிய திருமலைக் கொழுந்துப் பிள்ளையின் கட்டளைகள், நாறும் பூநாதன், குற்றால நாதன், சங்குப் பிள்ளை முதலியோரின் கட்டளைகள், நம்முடைய பகைவர்களுக்கு எல்லாம் சிங்கம் போன்றவ னாகிய நரபாலனின் கட்டளைகள், ஆற்றல் மிகுந்த பால்வண்ணச் சங்கு என்பவனின் கட்டளைகள், மிக்க சிறப்புடைய ஓமலூர்க் கிருஷ்ணன் என்னும் வியாபாரியின் கட்டளைகள், பெருமையுடைய பண்பை நகரினனான சங்குமுத்துவினுடைய கட்டளைகள் ஆகிய நிலங்களில் எல்லாம் பறவைகள் வந்திறங்கி மேய்கின்றனவே.

ஸ்தானிகள் சர்க்கரைப் பண்டாரம் என்று சொல்லப் படும் இறைவனுக்குத் தணியாத அன்புடன் பணிவிடைகள் செய்து மேன்மை பெறுஞ் சுந்தரத் தோழனின் கட்டளை: சிறப்புமிக்க கருவைப்பதி ராமநாயகன், உலகமெல்லாம் புகழும் தாகந்தீர்த்தான், நல்லூரிலேயுள்ள சங்கரமூர்த்திப் பிள்ளை ஆகியவரின் கட்டளைகள்; அடியவரான சடைத் தம்பிரான் பிச்சை எடுத்து வாங்கிவிட்ட கட்டளைகள்; அப்பால், மலைநாட்டார் விட்ட கட்டளைகள் ஆகிய நிலங்களிலெல்லாம் பறவைகள் இறங்கி மேய்கின்றனவே.

ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை

அன்பன் திருமலைக் கெழுந்துதன் கட்டளை நாறும்பூக் குற்றாலச் சங்குதன் கட்டளை

நங்களொல் லாரரி நரபாலன் கட்டளை வீறுசேர் பால்வண்ணச் சங்குதன் கட்டளை

மிக்கான ஓமலூர்க் கிருஷ்ணன் வணிகேசன் பேறுடைப் பம்பை வருசங்கு முத்துதன்

பேரான கட்டளைச் சீரான பற்றெல்லாம் (மே)