பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 141 (மானவர் - பெருமையுள்ளவர். ೧414೧4ುಖ66 தரிகொண்டு தில்லை நரிகொண்டு போச்சுது - குதிரைகள் எல்லாம் தங்கியிருக்கவில்லை; நரி உருவங்கொண்டு ஓடிப் போய்விட்டன எனப் பொருள் கொள்ளலாம். அல்லது அவன் வாங்கிய கொக்குகள் அவனுக்குத் தரிகொள்ளவில்லை; அவற்றை நரிகள் திருடிக் கொண்டு போய்விட்டன என்றும் சொல்லலாம். இரு பொருள் நயம் அறிக. காக்கை படுத்தல் - காவல் தொழில் பூணல்; அல்லது காகாசுரனின் கண்களைப் பறித்தல்)

முற்காலத்திலே பிடித்த பெரிய பெருச்சாளியை மூத்த நயினாரான பிள்ளையார்ப் பெருமான் மிகத் தந்திரமாகக் கொண்டு போய்விட்டார். அவருக்குப் பின்னாக வந்தவரான அவர் தம்பியாரோ ஆடும் இயல்புடைய மயிலையும் தம்முடைய பிள்ளைக் குறும்பினாலே பிடித்துக்கொண்டு போய் விட்டார். சொல்லுதற்கும் அருமையுயைட அன்னப் பறவையினை நன்னகரீசரான குற்றாலநாதரானவர் தமக்கு உண்கலம் தந்திட்ட பார்ப்பானாகிய பிரமனுக்குத் தந்து விட்டார். அழகான செம்பருந்தைக் கள்வனாகிய திருமால் கொண்டு போய்விட்டான். அதனால் நாம் வேட்டை யாடுவதும் தவறல்ல. வக்காவும் நாரையும், கொக்கும் பிடிப்பதற்கு நீ கண்ணியை எடுத்துக் கொண்டு ஓடிவாடா குளுவா!

வடிவழகிலே அனைவரையும் மிஞ்சும் இலஞ்சி நகரத்துக் குறத்தியை மணந்து கொண்ட செவ்வேளாகிய குறவன் முதன்முதல் வேட்டைக்குப் போனான்.அந்த நாளிலே ஆறு நாள்களுக்குப் பின்னர்தான் அவனுக்கு ஒரு கொக்கு அகப்பட்டது. அகப்பட்ட அந்தக் கொக்கை அவித்து ஒரு சட்டியிலே குழம்பாக வைத்தான். அதனை வேதப் பிராமணர்கள் எல்லோரும் உண்டனர். சைவர்கள் எல்லோரும் உண்டனர். தவப்பேறு உடையவர்களான முனிவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் வேட்டையாடுவதற்கு எவ்வித மறு பேச்சும் பேசாமல் கொக்குகளைப் பிடிப்பதற்குக் கண்ணியை எடுத்துக் கொண்டு வாடா குளுவா!