பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

கோவில்விளை யாட்டமெங்கும் கண்ணி குத்திக்

கூவினான் நூவனைவிட்டேவி னானே. 20. பறவைகள் மேய்தல் கல்விச் செழுமையிலே விளங்கும் தமிழுக்கு உரிமை யுடையவராக விளங்கும் திரிகூட நாதரின், அழகிய திருவடிகளைப் போற்றுபவன் செல்வப் பெருக்கிலே கடலை ஒப்பவன் குற்றாலத்துச் சிவராமன் என்னும் பெயருடைய நம்பி; எம் கோமானாகிய அவன் இறைவழிபாட்டிலே வல்லமையுடையவனான மணியப் பட்டன் நாளும் பெருமை வளர்ந்து கொண்டிருக்கும் முத்து நம்பி, பகைவரை வெல்லும் குற்றால நம்பி ஆகிய இவர்கள் வயல்களிலெல்லாம் மீன்கொத்திப் பறவைகளின் கூட்டம்; அப்பனே!

சீர்மையாளனாகிய பிச்சைப் பிள்ளை கோவில் திருப்பணிக்காக விட்ட வளமையுடைய புதுக்குளம், கொடையாளனாகிய சங்கு முத்து என்பவன் திருமாலைக் காக விட்ட காங்கேயன் கட்டளை, மகாராசனாகிய தென்குடிசை வயித்தியநாதன் விட்ட புதுக்குளம் ஆகிய வற்றுள் எல்லாம் ஏராளமான பறவைகளும், வெண்மை யான அன்னங்களும் தாராவும் வந்து மேய்கின்றன; அப்பனே! தானக் கணக்குடன், சீபண்டாரம் தன் பக்தர் கணக்கும், மேலானவராகிய குற்றால நாதரின் திருவாசல் மாடத்து நல்ல பத்தியமும், நானிலஞ் சூழும் குடிசை வைத்தியநாதன் என்னும் மக்களைக் காப்பவன் மிகவும் அபிமானம் வைத்த சிவராமனுக்காக விட்ட சம்பிரதிக் கணக்கும், ஆகிய வற்றுக்காக இட்ட நிலங்களிலும்,

வேத நாராயண வேள் என்பானின் குமாரன்; வெற்றி யுள்ள தொண்டை நாட்டை ஆள்பவன்; சீதரன் முத்து மன்னனுக்குரிய "விசாரணைக்குட் சேர்ந்ததான வயல்களி லெல்லாம் ஆசையுடன் கண்ணிவைத்துப் பறவைகளைப் பிடிப்பதற்குக் கங்கணம் கட்டி நின்றேன். ஏதோ ஒரு பறவை என்னைத் தொடர்ந்து வந்து கடிக்குதே அப்பனே!