பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 153

சற்று அப்பாலே போய், நான் ஒருமிப்பாக இருக்கையிலே, ஆயிரம் காகங்கள் ஆயிரம் கண்ணிக்குள்ளாகவும் வந்து சிக்கின. அவை தம் திட்டத்தை மறைத்துக்கொண்டு, செத்துக் கிடப்பன போலவே உடலை ஒடுக்கிக்கொண்டும் கிந்தன. அவை சிக்கியதைக் கண்ட நான் கண்ணிகளைக் கழற்றித் தரையிலே வைத்தேன்.அதன்பின், மங்கையர்க் கரசியின் பொருட்டாகக் கூன்.பாண்டியன் பஞ்சாட்சர மந்திரத்தை ஒதியதும், அவனுடைய பாவங்கள் எல்லாம் ஒருமிக்கப்பறந்து போனாற்போல, அகப்பட்ட அத்துணைப் பறவைகளும் கண்ணியுடன் பறந்துபோய் விட்டனவே அப்பனே! பறந்து போய் விட்டனவே!

தமக்கு ஆதரவான தூண்போன்றவர் என நம்பிவந்த அடைக்கலமாயிருந்தவர்களைச் சதிபண்ணித் தாம் வாழப்பார்க்கும் வஞ்சகரின் செல்வங்கள் அவர்களை விட்டு நீக்கிப் போவதைப் போலவும், நிறைந்த நீர்ப் பெருக்கினை யுடைய வடவருவியிலே நீராடியவரின் பாவங்கள் எல்லாம் கழுவப்படும் நீரிலே அழுக்குகள் கரைந்து போவது போல நீங்கிப் போவதைப் போவும், கும்பமுனியாகிய அகத்தி யருக்காகக் குற்றாலத்து மூர்த்தியானவர் சிவலிங்க ரூபமான காலத்திலே, இவ்வூரை விட்டே குதித்து ஒடிப்போன வைஷ்ணவர்களைப் போலவும், அம்பிகையைத் தம் ஒரு பாகத்தே உடையவரான திரிகூட நாதரின் அடியவர்கள் மேல்வந்த துன்பங்கள் விரைந்து நீங்கிப் போவது போலவும், பறவைகள் எல்லாம் பறந்து போய்விட்டனவே அப்பனே! பறந்துபோய் விட்டனவே! இராகம் - முகாரி - தாளம் - சாப்பு

பல்லவி போயினும் ஐயே! பறவைகள்

போயினும் ஐயே!

- அனுபல்லவி போயினும் ஐயே! நாயகர் குற்றாலர்

பொல்லாத தக்கன் மகத்தை அழித்தநாள்