பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

சுற்றாகச் சுற்றிச் சுற்றி வந்து உன்னுடைய சிங்கியை முதலிலே தேடுவாயாக அப்பனே!

கடுக்கையார் திரிகூடத்திற்

காமத்தால் வாமக் கள்ளைக் குடித்தவர் போலே வீழ்ந்தாய்

கொக்குநீ பிடித்து வாழ்ந்தாய் அடிக்கொரு நினைவேன் சிங்கா ஆசைப்பேய் உனைவிடாது செடிக்கொரு வளையம் போட்டுச் சிங்கியைத் தேடு வாயே.

(வாமக்கள் - புளித்த பழைய கள். கடுக்கை - கொன்றை மாலை. வாழ்ந்தாய் - அது உன்னால் இயலாது என்பது குறிப்பு)

27. நூவனைத் தேடச் சொல்லுதல்

வேடுவிச்சியாகிய கள்ளியான அவள், ஒருநாள் கூடியிருக்கும் காலத்திலே, என்னை மெய்யில்லாதவன்' என்று பிணக்கத்தினால் சொன்னாள்.அந்தப் பேச்சால் நானும் பிணங்கினேன். அதனால், உருவிலியாகிய மன்மதனும் என் மேல் பகை கொண்டான். என் மேல் மலரம்புகளைப் போடுவானானான். அதனால், நான் புறப்பட்டுத் தேடவும் சக்தியற்றவனானேன். நூவா இத் திரிகூட மலை நாட்டிலே எங்கும் தேடி என் சிங்கியைக் கொண்டுவந்து எனக்குக் காட்டுவாயாக. அப்போதுதான் நான் பிழைப்பேன்.

வேடுவக் கள்ளி யோர்நாள்

மெய்யிலா தவனென் றென்னை ஊடலில் சொன்ன பேச்சால்

உருவிலி பகைத்தான் என்மேல் போடுவான் புஷ்பபாணம்

புறப்பட மாட்டேன்நூவா தேடிநீ திரிகூடத்தில்

சிங்கியைக் காட்டு வாயே.