பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 157

(என்னை மெய்யில்லாதவன் என்றாள். அதனால் உருவிலியாகிய காமன் என்னைப் பகைத்தான்! என்று சொல்லும் நயம் காண்க. மெய்யிலாதவன் - காமவேள்.)

28. நூவன் மறுத்தல் அழகிய நெற்றிக் கண்ணினை உடையவரின் திரிகூடத் திலே அவளைப் போய் நீ அணைந்தால்தான் என்ன? நீங்கள் பிரிந்திருந்தால்தான் என்ன? நூவனுக்கு அதனால் ஏதாவது நட்டம் உண்டோ? எனக்கு எதற்கடா இந்தக் கங்காணம்? சிங்கா! உனக்கு அக்கறை உண்டானால் கொங்கணச் சிங்கியான உன் காதலியை என் முன்னாலே கூட்டிக் கொண்டுவா: அப்புறம் நான் அவளை உனக்குக் காட்டுகின்றேன்.

அங்கணர் திரிகூடத்தில்

அவளைநீ அணைந்தால் என்ன நுங்களில் பிரிந்தால் என்ன

நூவனுக் குண்டோநட்டம் கங்கணம் எனக்கேன் சிங்கா

காசலை உனக்குண் டானால் கொங்கணச் சிங்கி தன்னைக் கூட்டிவா காட்டு வேனே. (நட்டம் - நஷ்டம். கங்கணம் - கங்காணம்; மேல் விசாரிப்பு. காசலை - அக்கறை)

29. சிங்கன் தேடித் திரிதல்

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருக்காளத்தி, சீகாழி, சிதம்பரம், திருவாரூர், காசி, குருநாடு, கேதாரம், கோல் கொண்டா, கோகரணம், செகநாதம், கும்பகோணம், அரியலூர், சீரங்கம், திருவானைக்கா ஆகிய இடங்களில் எல்லாம் போய்ச் சிங்கியை அலைந்து தேடினான் சிங்கன். பின் திருச்சிராப்பள்ளியையும் பார்த்துவிட்டு மதுரையிலும் தேடிவிட்டுச் சந்திர சூடரின் திரிகூடமலைக்கு வந்து சேர்ந்தான்.