பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 163

பூவென்ற பாதம் வருடி வருடிப்

புளக முலையை நெருடி நெருடி ஏவென்ற கண்ணிக்கோர் அஞ்சனம் தீட்டி

எடுத்த சுருளும் இதழால் இடுக்குவாள் வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள்

மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின் ஆவென்றொருக்கால் இருக்கால் உதைப்பள்

அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம் (சிங்கி) தாராடும் குன்றி வடத்தை ஒதுக்கித்

தடமார் பிறுகத் தழுவவந் தாலவள் வாராடும் கொங்கைக்குச் சந்தனம் பூசாள்

மறுத்துநான் பூசினும் பூசலா காதென்பாள் சீராடிக் கூடி விளையாடி இப்படித்

தீரா மயல்தந்த தீராமைக் காரியைக் காராடும் கண்டர்தென் ஆரிய நாட்டுறை

காரியப் பூவையை ஆரியப் பாவையைச் (சிங்கி) (ஆரம் - முத்தாரம். படம் - மேற்சிலை. கோரம் - கோபத்தால் ஏற்பட்ட தன்மை. சுகக்காரி - இன்பந் தருபவள். பாரத்தனம் - பருத்த தனங்கள். கனிய - கனிவு எய்தும் படியாக பூ வென்ற - பூவையும் தன் மென்மையினாலே வெற்றி கொண்ட புளகம் - பூரிப்பு. சுருள் - தாம்பூலச் சுருள். தார் - மாலை. தடம் - அகன்ற)

33. அடையாளம் வினவுதல் சிங்கங்களை எல்லாம். ஒத்ததாயிருக்கின்ற ஆற்றலினை உடைய சிங்கனே! சங்கமெல்லாம் முத்துகளை ஈனுகின்ற வளத்தினையுடைய சங்கரராகிய திரிகூடநாதரின் மலைச்சாரலிலே, இன்பங்கள் எல்லாம் யாரடா அறிவார்கள்? உன் சிங்கிக்குரிய அங்க அடையாளங்கள் எவை என்று சொல்வாயாக (நானும் தேடி வருகிறேன் என்பது குறிப்பு)

கொச்சகக் கலிப்பா சங்கமெலாம் முத்தீனும் சங்கர்திரி கூடவெற்பில் பொங்கமெலாம் செய்யுமுங்கள் போகமெல்லாம் ஆரறிவார்