பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

சிங்கமெலாம் ஒத்ததுடிச் சிங்காஉன் சிங்கிதனக் கங்கமெலாம் சொல்லி அடையாளம் சொல்வாயே.

(சங்கர் - அடியார் கூட்டத்தினை உடையவர். பொங்கம் - பொங்கி வரும் இன்பம். துடி - ஆற்றல்; துடிதுடிப்பு) 34. சிங்கியின் அங்க அடையாளம் கறுப்பு நிறத்திலே ஒர் அழகியடா, அப்பனே! என் சிங்கி, கறுப்பு நிறமானாலும் அவள் ஒப்பற்ற அழகியடா! ஆனால், காமத்தை எழுப்பித் தன்பால் ஆடவரை வசப்படுத்துவதிலே மிகுதியான ஆற்றலுடையவள். அவளை அடைந்தால் மிகுந்த இன்பம் தந்து மகிழ்விப்பவள்.

அவளுடைய கண்கள் இரண்டும் அம்புக்கணை களைப் போல நீண்டிருக்கும். ஒரு கையத்தனை அகலமாகத் தோன்றுமடா! பெண்களையும் மயக்குவது அவளுடைய விரகப்பார்வை. என் சிங்கி பிடித்தால் மன்மதன் என்ற பயலும் தாங்குவானோ? அவனும் அவளுக்கு அடிமையாகி விடுவானே!

அவளுடைய புன் சிரிப்பும், முக லாவண்யமும், அவள் கைவீசிச் செல்லும் அந்த அழகும், காமப் பகைவர்களான முனிவர்களும் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்களேயடா! மொத்தமாகத் தொகுத்துச் சொன்னேன். இனிச் சொல்லக் கூடாத வகையிலே ஒரு வகையாய் வருகுதே! என்னை அப்படியே மயக்குதே அப்பனே!

ஆனேற்றி லேறிவரும் திருவுலாவினை உடையவரான திருக்குற்றால நாதரின் சடையிலே விளங்கும் இளம் பிறையினைப் போலே விளங்கும் ஒப்பற்ற நெற்றியினை உடையவள். அவளுடைய நடையின் அழகும், துடைகளின் அழகும், அவள் உடுத்தும் உடையின் அழகும், ஐயோ! என் கண்முன் தோன்றித் தோன்றி என்னை உருக்குதே அப்பனே! இராகம் - பியாகடை தாளம் - மிசுரம் பல்லவி கறுப்பில் அழகியடா! என் சிங்கி கறுப்பில் அழகியடா