பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 1.65

அனுபல்லவி கறுப்பி லழகி காமச் சுறுக்கில் மிகுந்த சிங்கி - சுகக்காரி

சரணங்கள்

(கறுப்)

கண்க ளிரண்டும் அம்புக் கணைபோல் நீண்டிருக்கும்

கையத் தனையகலம் காணுமடா பெண்கள் மயக்குமவள் விரகப்பார்வை சிங்கி

பிடித்தால் மதப்பயலும் பெலப்பானே (கறுப்) நகையும் முகமும் அவள் நாணயக் கைவீச்சும்

பகைவருந் திரும்பிப் பார்ப்பாரடா தொகையாய்ச் சொன்னேனினிச் சொல்லக்கூடாதொரு

வகையாய் வருகுதென்னை மயக்குதையே (கறுப்) விடையில் வரும்பவனி உடையார் திருக்குற்றாலர் சடையில் இளம்பிறைபோல் தனிநுதலாள் நடையில் அழகும்இரு துடையில் அழகும்.அவள்

உடையில் அழகுமென்னை உருக்குதையோ (கறுப்) (அம்புக்கணை - அம்புகள்)

35. என்னடா கூலி? ஒன்றோடொன்று தொடர்புடையனவாக அந்தாத் திலே நிற்கின்ற அண்டங்களையெல்லாம் சாட்டையில்லாத பம்பரத்தைப் போல ஆட்டுவிக்கும் இறையவர், குற்றால நாதராகிய தண்ணளியை உடைய பெருமானார். அவருடைய நன்னாடான இத் திரிகூட நாட்டிலே எல்லோருக்கும் காட்டிக்கொண்டிருக்கும் உன்னுடைய மோகமாகிய துன்பம் தீரும்படியாக, உன் சிங்கியைத் தேடி உன்னுடன் சேர்த்துவைக்கும் பேர்களுக்கு என்னடா கூலி தருவாய்? அதைச் சொல்வாயடா.

கொச்சகக் கலிப்பா சாட்டிநிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாட் பம்பரம்போல் ஆட்டுவிக்கும் குற்றாலத் தண்ணலார் நன்னாட்டிற்