பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

காட்டுவிக்கும் உன்மோகக் கண்மாயச் சிங்கிதனைக் கூட்டுவிக்கும் பேர்களுக்குக் கூலியென்ன சொல்வாயே.

(தண்ணலார் - தண்ணளியினையுடையவர். கண் - துன்பம். மோகக் கண் மாயச் சிங்கி - மோகத்தை விளைத்த கண்களையுடைய மாயத்தையுடைய சிங்கியும் ஆம்) - 36. எல்லாம் தருவேனடா!

வாடை மருந்துப் பொடியும், அம்மியிலேறி ஊர்ந்து வரும் மர்ப்பாவையுங்கூடப் பின்தொடர்ந்து வரச்செய்யும் மாயப் பொடியும், பிரிந்தவர் கூடியிருப்பதற்கான மருந்தும், இருபொழுதும் பிரியாமல் கூடியிருப்பவர்களைக் கலைப்ப தற்கான மருந்தும், காடு கட்டும் வித்தையும், நெருப்பைக் கட்டும் வித்தையும், குறளிவித்தை, கண்கட்டு வித்தைகளும் எல்லாம் நினக்குக் காட்டித் தருவேன். விநோதமான காமனுக்குரிய ரதிதேவியைப் போலே இத் திரிகூடமலைச் சாரலிலே உள்ளவளான என் சிங்கியைக் காட்டுவாயாக, அப்பனே!

மலைகளையும் கரைந்து ஒடும்படியாகச் செய்வேன். குமரிப் பெண்களுக்கு முகிழ்த்து வராத முலைகளையும் முகிழ்த்து வருமாறு பண்ணுவேன். வந்திருக்கும் முலைகளை மறைந்து போகவும் செய்வேன். ஒளிந்துவிட்ட பேர்களுக்கு மோகினி மந்திரத்தைச் சொல்லி மீண்டும் வெளிப்படவும் செய்வேன். பொட்டிட்டு வசீகரம் செய்வேன். ஒருவருக்கும் தெரியாமல் போகவும் வரவும் கூடிய சித்துகளையெல்லாம் அறிவேன். கலகக்காரனாகிய மதனப் பயலை என்மேலே கண்காட்டிவிட்ட என் சிங்கியை மட்டும் எனக்குக் காட்டுவாயாக அப்பனே! இராகம் - தர்பார் தாளம் - ரூபகம் கண்ணிகள் வாடை மருந்துப் பொடியும் அம்மியூர்

மரப்பாவை பின்தொடர மாயப்பொடியும் கூடியிருக்க மருந்தும் இருபொழுதும்

கூடியிருப் பார்களைக் கலைக்க மருந்தும்