பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 167

காடுகட்டுக் கினிக்கட்டு குறளி வித்தை

கண்கட்டு வித்தைகளும் காட்டித் தருவேன் வேடிக்கைக் காமரதிபோல் திரிகூட -

வெற்பிலுறை சிங்கிதனைக் காட்டாய ஐயே! 1 மலையைக் கரையப்பண்ணுவேன் குமரிகட்கு

வாராத முலைகளும் வரப்பண்ணுவேன். முலையை ஒளிக்கப் பண்ணுவேன் ஒளித்தபேர்க்கு மோகினி மந்திரஞ் சொல்லி வரப்பண்ணுவேன் திலக வசீகரம் செய்வேன் ஒருவருக்கும்

தெரியாமற் போகவரச்சித்தும் அறிவேன் கலகமத னப்பயலை என்மேற்கண்

காட்டிவிட்ட சிங்கிதனைக் காட்டாய் ஐயே! 2 (அம்மியூர் மரப்பாவை பின்தொடர - அம்மிகள் ஊர்ந்து வரவும், மரப்பாவையானது பின் தொடர்ந்து வரவும். கினிக்கட்டு - நெருப்பைக் கட்டும் மந்திரம். திலக வசீகரம் - வசியப் பொட்டு இட்டுச் செய்யும் வசியங்கள்.)

37. நூவன் பரிகசித்தல் திரிகூடமலையிலே வந்துள்ள சிங்கனே! நீ போகும் மார்க்கத்தை நான் கடத்தி விட்டுவிட்டேனானால், ஆகாச மார்க்கமாகத் தப்பியோடுவதற்கு நீ தெளிவான வித்தை களை அறிவாயோடா? நீ சொன்ன உன் மருந்துகளைப் போலவே சகலருக்கும் குறிகள் சொல்லிக் கொண்டும், நீ போற்றும் உன்னுடைய சிங்கியானவள் போன புதுத் தெரு இதுதான், பார்த்துக் கொள்வாயாக

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆற்றைநான் கடத்தி விட்டால் ஆகாச மார்க்கம் ஒடத் தேற்றநீ அறிவாய் கொல்லோ திரிகூட மலையிற் சிங்கா! சாற்றுமுன் மருந்து போலச்

சகலர்க்கும் குறிகள் சொல்லிப்