பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 169

இராகம் - முகாரி தாளம் - ஆதி பல்லவி எங்கேதான் போனாள் ஐயே! என்சிங்கி இப்போது எங்கேதான் போனாள் ஐயே!

அனுபல்லவி கங்காளர் திரிகூடக் கர்த்தர்திரு நாடுதன்னில் (எ)

சரணங்கள் வேளா கிலுமயக்குவள் வலியத் தட்டிக்

கேளாமலுமு யக்குவள் ஆளாய் அழகனுமாய் யாரையெங்கே கண்டாளோ

தோளாசைக் காரிசிங்கி சும்மா கிடக்கமாட்டாள் (எ) மெய்க்குறியால் எங்கும் வெல்லுவள் மனக்குறியும்

கைக்குறியும் கண்டு சொல்லுவள் திக்கிலடங் காதுகுறி இக்கிலடங் காதுமொழி

மைக்குளடங் காதுவிழி கைக்குளடங் காதகள்ளி (எ) சித்திரச பேசர்மேலே சிவசமயப்

பத்தியில்லாப் பேயர் போலே குத்தியில் அரக்கும்.கள்ளும் குடுவையில் தென்னங்கள்ளும்

அத்தனையும் குடித்துப்போட் டார்பிறகே

தொடர்ந்தாளோ? (எ) (கங்காளர் - எலும்பு மாலையணிந்தவர். வேள் - மதனவேள். குத்தி - குப்பி, அரக்கு - சாராயம்)

39. சிங்கியைக் காணுதல் ஆண்மையினனாயிருந்தும் பெண்களைப்போலத் தன் விரக வேதனையினால் தளர்ந்துபோன சிங்கன், தாம் பூணும் அணியாகப் பாம்புகளை அணிபவரின், தேவலோகத்தைப் போன்றதான நல்ல குற்றாலநாதரின் பெருமைமிக்க பெருந் தெருவிலே அவளைக் கண்டான். தேடிய பொருளைக் காணாமற் போக்கடித்துவிட்டு, அதனால் வருந்தி வாடியவர் பின்னர், அதனைக் கண்டெடுத்தது போலப் பெரிதும் மகிழ்ச்சி கொண்டான்.