பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 171

41. சிங்கன் அழைத்தல் இங்கே வருவாயடி என் கண்னே! இங்கே வருவாயடி இங்கே வந்து, மலர்போன்ற நின் சிவந்த கையினைத் தருவாயாக. என்னுடைய மோகவாதையினைத் தொட்டுக் காண்பாயாக என் காமச் சிங்கியே இங்கே வருவாயாடி!

நின் பாதம் நோகுமே. நொந்தால் என் மனம் வருந்துமே இனியும் நின் பாதம் நோக்குமாறு நிற்பது எதனாலோ? இனியும் பொறுத்திருப்பது பாவம் என் குளிரோ கொடியது. ஆனால் என் காதலோ உறுதியானது, அதனால் இங்கே வருவாயடீ!

பாவியான மதனனும் கணைகளை ஏவினான். சோலையிலே மாமரத்துக் குயில்கள் கூவக் கூவ, உன்னைத் தழுவித் தழுவி அணைத்துக் கொள்ள வேண்டுமென்று என் ஆவியும் சேர்கின்றது. அதனால், இங்கே வருவாயாக!

குறும்பலாவினடியிலே வீற்றிருப்பவரும், வடவருவி யினை உடைய திருக்குற்றால நகரிலே எழுந்தருளியிருப்ப வருமான திருக் குற்றாலநாதரின் பெருமைகளைப் பாடிக் கொள்ளலாம். மணமலர்களைச் சூடிக் கொள்ளலாம். ஒரு சமயம் ஊடிக் கொள்ளலாம். அதற்கு ஈடாக இரண்டு பங்கு கூடியும் கொள்ளலாம். என் கண்ணே! இங்கே வருவ.யடீ! இராகம் - எதுகுலகாம்போதி - தாளம் - சாப்பு பல்லவி இங்கே வாராய்! என் கண்ணே! இங்கே வாராய்

அனுபல்லவி இங்கே வாராய் மலர்ச் சங்கை தாராய் மோகச் சங்கை பாராய் காமச் சிங்கியாரே. (இங்)

சரணங்கள் பாதம் நோமே நொந்தால் மனம் பேதமாமே பாதநோக நிற்ப தேது பாவமினிக்