பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

கூதலோ கொடிது காதலோ கடினம் (இங்) பாவிதானே மதன்கணை ஏவினானே காவில் மாங்குயில்கள் கூவிக்கூவியென தாவி சோருதுனை ஆவி ஆவிக் கட்ட (இங்) வருக்கை மூலர்வட அருவித் திருக்குற்றாலர் பெருக்கம் பாடிக்கொள்ள மருக்கள் சூடிக்கொள்ள ஒருக்கால் ஊடிக்கொள்ள இருக்கால் கூடிக்கொள்ள (இங்)

(கூதல் - வாடை கா-சோலை. பெருக்கம் - பெருமைகள்)

42. சிங்கன் கூத்தாடினான் தமக்குத் திருத்தொண்டு புரிந்தவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் தோழரானவர் சிவபெருமான். அவருடைய திரிகூடமலைச்சாரலிலே தன் சிங்கியைக் காணாது திண்டாடி நின்ற சிங்கன், தன்னுடன் காதல் கனியப் பேசுகின்ற தன் சிங்கியைக் கண்டதும் ஆடினான். துள்ளிக்குதித்தான். மலரிலே தேன் உறிஞ்சுகின்ற வண்டினைப் போல, அவளை மீண்டும் மீண்டும் கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடிக் கொண்டிருப்பானுமாயினான்.

கொச்சகக் கலிப்பா தொண்டாடும் சுந்தரர்க்குத் தோழர்திரி கூடவெற்பில் திண்டாடி நின்றசிங்கன் சீராடும் சிங்கிதனைக் கண்டாடித் துள்ளாடிக் கள்ளாடும் தும்பியைப்போல் கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடிக் கொண்டானே.

43. சிங்கன் சிங்கி உரையாடல் இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல் எங்கேடி நடந்து விட்டாய் சிங்கி? பூங்கொத்துகள் அணிந்துள்ள கூந்தலினையுடைய பெண்களுக்கு விஸ்தாரமாகக் குறி சொல்லப் போனேனடா சிங்கா!

உன்னைப் பார்க்கும்போது ஒரே அதிசயமாகத் தோன்றுகிறது. ஆனால் சொல்லவும் பயமாக இருக்குதடி சிங்கி! யாருக்கும் பயமில்லை! தோணின் காரியத்தைப் பயப்படாமல் சொல்லடா சிங்கா!