பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 173

உன் காலுக்கு மேலாகப் பெரிய விரியன் பாம்பு கடித்துக் கொண்டு கிடப்பதேனடீ சிங்கி? சேலத்து நாட்டிலே குறிசொல்லிப் பெற்ற சிலம்பு கிடக்குதடா சிங்கா!

சேலத்தார் இட்ட அந்தச் சிலம்புக்கு மேலாக, என்னவோ திருகலும் முறுகலுமா யிருக்கிறதே அது என்னடி சிங்கி! அது கலிங்க நாடார் எனக்கு வரிசையாகக் கொடுத்த முறுக்கிட்ட தண்டையடா சிங்கா!

நீண்டும் குறுகியும் நாங்கூழ்ப் புழுவைப் போல நெளிந்த நெளிவு என்னடி சிங்கி? அது பாண்டியனார் மகள் விரும்பிக் கேட்ட குறிகளுக்காக இட்ட பாடகமடா சிங்கா!

செத்த தவளையை உன் காலிலே கட்டியிருக்கிறாயே அதற்குக் காரணம் ஏது பெண்ணே சிங்கி? ஆண்டவர் குற்றாலருடைய சந்நிதிப் பெண்கள் எனக்கு அணிவித்த மணிக்கெச்சமடா சிங்கா!

உன் சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி சுருண்டு கிடப்பானேன் சிங்கி? கண்டிய நாட்டிலே முன்பு நான் குறி சொல்லிப் பெற்ற காலாழியும் பீலியும் அவையடா சிங்கா!

மென்மையான அழகிய நின் துடைகளின்மேல் வாழைக் குருத்தை இப்படி விரித்து மடித்து வைத்தது யார் சிங்கி? திருநெல்வேலி யார் தந்த கல்லாச் சேலை அது. அதனை நான் நெறிபிடித்து உடுத்திருக்கிறேன் சிங்கா!

உன் துடைகளுக்கு மேற்புறத்திலே உயர்ந்த அரசிலையின் மேலே சாரைப் பாம்பு போலக் கிடப்பது ஏதடி பெண்ணே சிங்கி? சிறப்புமிக்க சோழ ராசனின் குமாரத்தியார் தந்த செம்பொன் அரைஞாணடா சிங்கா

நின் மார்பிற்குப் புடைத்த சிலந்தி போன்ற நின் கொங் கைகளின் மேல் கொப்புளங்கள் காணப்படுவதேனடீ சிங்கி? உலகுக்குள்ளே சிறப்புடைய காயற்பட்டினத்தார் தந்த பெரிய முத்தாரமடா அது, சிங்கா!

எட்டுப் பறவைகள் குமுறுவது போன்ற குரல் ஒலிக்கும், கழுகுபோன்ற நின் கழுத்திலே பத்து எட்டுப் பாம்புகள்