பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

கிடக்கின்றனவே! அவை ஏதடி சிங்கி? குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும் இட்ட சவடியடா அது, சிங்கா!

இராகம் - தன்யாசி தாளம் - ஆதி கண்ணிகள் இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்

எங்கே நடந்தாய் நீ சிங்கி? (எங்கே நடந்தாய் நீ) கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்

குறிசொல்லப் போனனடா சிங்கா! (குறிசொல்லப்) பார்க்கில் அதிசயந் தோணுது சொல்லப்

பயமா இருக்குதடி சிங்கி! (பயமா) ஆர்க்கும் பயமில்லை தோனின காரியம்

அஞ்சாமற் சொல்லடா சிங்கா! (அஞ்சா) காலுக்கு மேலே பெரிய விரியன்

கடித்துக் கிடப்பானேன் சிங்கி? (கடித்து) சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற

சிலம்பு கிடக்குதடா சிங்கா! (சிலம்பு) சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே

திருகு முறுகென்னடி சிங்கி! (திருகு) கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை

கொடுத்த வரிசையடா சிங்கா! (கொடுத்த) நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல

நெளிந்த நெளிவென்னடி சிங்கி? (நெளிந்த) பாண்டிய னார்மகள் வேண்டும் குறிக்காகப்

பாடக மிட்டதடா சிங்கா! (பாடக) மாண்ட தவளையுன் காலிலே கட்டிய

மார்க்கம தேதுபெண்ணே சிங்கி! (மார்க்க) ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப் பெண்கள்

அணிமணிக் கெச்சமடா சிங்கா (அணிமணிக்) சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி

சுருண்டு கிடப்பானேன் சிங்கி? (சுருண்டு)