பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 175

கண்டிய தேசத்திற் பாண்டுநான் பெற்ற

காலாழி பீலியடா சிங்கா! (காலாழி) மெல்லிய பூந்தொடை வாழைக் குருத்தை

விரித்து மடித்ததார் சிங்கி? (விரித்து) நெல்வேலி யார்தந்த சல்லடைச் சேலை

நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா! (நெறிபிடித்) ஊருக்கு மேற்கே உயர்ந்த அரசிலே

சாரைப்பாம் பேது பெண்ணே சிங்கி? (சாரைப்) சீர்பெற்ற சோழன் குமாரத்தி யார்தந்த

செம்பொன் அரைஞாண்டா சிங்கா! (செம்பொன்) மார்பிற்கு மேலேபுடைத்த சிலந்தியில்

கொப்புளம் கொள்வானேன் சிங்கி? (கொப்பு) பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த

பாரமுத் தாரமடா சிங்கா! (பார) எட்டுப் பறவை குமுறும் கமுகிலே

பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி! (பத்தெ) குட்டத்து நாட்டாரும் காயங் குளத்தாரும்

இட்ட சவடியடா சிங்கா! (இட்ட)

(இந்தப் பாட்டிலே வஞ்சியின் நகைகள் பலவற்றையும் குறவன் கண்டு அதிசயித்த வகையும், அதற்கு அவள் சொன்ன பதிலையும் காணலாம். இதே முறையில் அமைந்ததே அடுத்த பாட்டும்.)

44. ஏனடீ சிங்கி?

வள்ளிக் கொடியிலே துத்திப்பூப் பூப்பது ஏனடி சிங்கி? காதிலே வங்காளத் தாரிட்ட சிங்காரமான கொப்பு என்னும் நகையடா அது சிங்கா. அதன்மேல் கள்ளிப்பூப் பூத்திருப்பது வியப்புக்கு உரியதல்லவோ சிங்கி? அது தெற்கு வள்ளியூரார் தந்த மாணிக்கத் தண்டொட்டியடா சிங்கா வன்னக் குமிழ மலர் போன்ற உன் நாசியிலே புன்னை அரும்பு இருப்பதேது சிங்கி? அது நம் நாட்டின் முத்துச்சலாபத்திலே கிடைத்த முத்தினால் செய்த முத்து மூக்குத்தியடா சிங்கா. சொருகி