பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

முடித்த உன் கூந்தலிலே தூக்கணங்குருவிக் கூடுபோலத் தொங்குவது என்னடி சிங்கி? தென் குருகை யூரார் தந்த குப்பியும் தொங்கலுமடா அது சிங்கா பொன்னை இட்டு வைத்தாற் போல விளங்கும் உன் மேனி எல்லாம் மின்னலைப் போல விட்டு விட்ட ஒளி வீசுகிறதே. அஃது என்னடி? இந்த அழகான நகைகளிலே பதிந்துள்ள மாணிக்கக் கற்களடா அவை,

இந்த நகைகள் எல்லாம் அணிந்தால் உன் உடல் தாங்குமோ சிங்கி? இந்த உலகத்திலே ஈசர்க்கும் மங்கையர் களுக்கும் எல்லாம் பொறுக்கக் கூடியதுதானடா சிங்கா! குன்றத்தைப் போன்ற நின் கொங்கைகளைப் பார்த்தால் உன் கொடி போன்ற இடை தாங்குமோடி சிங்கி? தன் கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோடா சிங்கா. இதற்கு முன் இல்லாத சுற்றெல்லாம் எங்கேடி நீ படித்தாய் சிங்கி? நாட்டிலுள்ள பெண்களைக் காண்பவர்களுக்கு இவை எல்லாம் எளிதிலே வந்துவிடுமடா சிங்கா. பெட்டகத்துப் பாம்புபோல விளங்கும் நின் கடிதடத்தைப் பற்றி ஆட்டி மகிழவேண்டாமோ சிங்கி? இந்த வெட்ட வெளியிலே பெட்டிப் பாம்பு, அதிலும் நல்ல சாதிப்பாம்பு ஆடுமோடா சிங்கா? உன்னை அப்படியே கட்டி அணைத்துக் கெண்டு முத்தங் கொடுக்கட்டுமோ சிங்கி? நடுப்பட்டப் பகலிலே நான் உன்னிடம் நெருங்கிவந்து முத்தங் கொடுப்பேனோடா சிங்கா! என்னை மோதுவதற்கு அமைந்த நின் கொங்கை களாகிய யானைகளை மோதட்டுமோ சிங்கி? உன் காமவெறி தணியா விட்டால் மண்ணோடே கிடந்து முட்டடா சிங்கா. உன் சேலை உடையைச் சிறிதே நெகிழ்ந்து விடட்டுமா சிங்கி? சும்மா நாலுபேர் முன்னிலையிலே என்னை நாணங் குலையாதேடா சிங்கா. உன் பாதங்களை வருடி உன் துடையிலே தாடனங்கள் செய்ய வேண்டாமோ சிங்கி? உன் மன மயக்கத்தை வருடிக்கொண்டே போய்ப் பூனையைக் குத்திப் பிடியடா சிங்கா. உன்னுடைய நல்ல வாயிதழ்களைச் சுவைப்பதற்கு என் நாக்குத் துடிக்குதடி சிங்கி! உன் வாய்க்கு ருசியானது மயக்கந்தரும் கள் அல்லவோடா சிங்கா.